இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!
Showing posts with label மத்திய அரசு பணிவாய்ப்பு தகுதிகள் தமுமுக குவைத். Show all posts
Showing posts with label மத்திய அரசு பணிவாய்ப்பு தகுதிகள் தமுமுக குவைத். Show all posts

April 26, 2008

மத்திய அரசு நிறுவனத்தில் பி.இ.,/எம்.பி.ஏ., தகுதிக்கான பணிவாய்ப்பு

ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடட் இது மத்தியஅரசின் பொதுத்துறை நிறுவனம். இதில் காலியாகவுள்ள 100 எக்சிகியூடிவ் டிரெய்னி பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


காலியிடங்கள்: டெக்னிகல் 90, நிதி 5 மற்றும் பர்சானல் 5.


தகுதிகள்:

டெக்னிகல் பிரிவு: ஏ.ஐ.சி.டி.இயால் அங்கீகரிக்கப்பட்ட பி.இ./பி.டெக். படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


பைனான்ஸ்: பட்டப்படிப்புக்குப் பின் சி.ஏ./ ஐ.சி.டபிள்யூ.ஏ. அல்லது நேரடி படிப்பாக எம்.பி.ஏ. பைனான்ஸ் முடித்திருக்க வேண்டும்.


எச்.ஆர்.: பட்டப்படிப்புக்குப் பின் எச்.ஆர். பிரிவில் எம்.பி.ஏ. முடித்திருக்க வேண்டும். அல்லது சமூகவியலில் பட்ட மேற்படிப்பு முடித்திருக்க வேண்டும்.


முக்கியக் குறிப்பு: இவற்றில் குறைந்தது 60% மதிப்பெண் பெற்றிருப்பது மிக முக்கியம். தற்போது இவற்றில் இறுதியாண்டு படிப்பவரும் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தற்போது பயன்பாட்டில் உள்ள இமெயில் முகவரியைப் பெற்றிருப்பது அவசியம்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.500. இது டிடியாக அனுப்பப்பட வேண்டும். தேசிய மயமாக்கப் பட்ட வங்கி ஒன்றிலிருந்து இதைப் பெற வேண்டும். ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடட் என்ற பெயரில் ராஞ்சியில் மாற்றத்தக்கதாக இதை எடுத்து ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கிடைக்கும் பதிவுத் தாளுடன் இணைத்து அனுப்ப வேண்டும். ஆன்லைனில் மே 3ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இன்டர்நெட் முகவரி: www.epostindia.org

இந்தப் பணிகளுக்கான போட்டித் தேர்வு ஜூன் 8 அன்று நடத்தப்படும்.