இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!
Showing posts with label புத்தாண்டு கொண்டாட்டங்கள் நட்சத்திர ஓட்டல். Show all posts
Showing posts with label புத்தாண்டு கொண்டாட்டங்கள் நட்சத்திர ஓட்டல். Show all posts

January 02, 2008

நாகரீகம் என்னும் பெயரால் அநாகரீகம்

சென்னை நகரில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மிகவும் கோலாகலமாக நடந்தன. சென்னை நகர் முழுவதும் மக்கள் புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லி, மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தார்கள். நகரில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்களிலும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மிகவும் எழுச்சியோடு நடந்தன.

நட்சத்திர ஓட்டல்களில் மது அருந்திவிட்டு ஆண்களும், பெண்களும் கட்டிப் பிடித்து நடனமாடினார்கள். சில ஓட்டல்களில் டிஸ்கோ நடனம் களை கட்டியிருந்தது. சில ஓட்டல்களில் நடிகர்-நடிகைகள், துணை நடிகர்-நடிகைகள் குத்தாட்டம் போட்டு, கும்மாளம் போட்டார்கள்.சென்னை மைலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சவேரா நட்சத்திர ஓட்டலிலும் புத்தாண்டு விழா மிகவும் கோலாகலமாக நடந்தது. இங்கு சுமார் 3 ஆயிரம் பேர் ஆண்களும், பெண்களும் புத்தாண்டு விருந்தில் கலந்து கொண்டு, மது அருந்தி ஆட்டம் போட்டார்கள்.

50 பேர் ஆடக்கூடிய நடன மேடையில், ஒரே நேரத்தில் 150 ஆண்களும், பெண்களும் உல்லாச ஆட்டம் போட்டனர். இதனால் நடனமேடை அமைக்கப் பட்டிருந்த பலகை உடைந்து, நடனமேடை அப்படியே சரிந்தது
உற்சாக மது மயக்கத்தில் ஆட்டம் போட்ட 20 ஆண்களும், பெண்களும் நடன மேடை உடைந்த இடத்தில், நீச்சல்குளத்தில் உள்ள தண்ணீருக்குள் விழுந்தனர். இரவு 11.20 மணிக்கு இந்த (துயர..?) சம்பவம் நிகழ்ந்தது.