இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!
Showing posts with label தமுமுக மமக தேர்தல் சின்னம் குவைத். Show all posts
Showing posts with label தமுமுக மமக தேர்தல் சின்னம் குவைத். Show all posts

May 11, 2009

மக்களே கண்டிப்பாக வாக்களியுங்கள்..!

2009 மே 13 புதன்கிழமையன்று தமிழகம்; 39 புதுவை 1 ஆக 40 தொகுதிகளுக்குரிய மக்கள் சபை உறுப்பினர்களை (M.P.) தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதில் இங்குள்ள முஸ்லிம்கள் அனைவரும் தவறாது கலந்து தங்களின் விலை மதிப்பற்ற வாக்குகளை முறையாகப் பதிவு செய்வதே கடமையாகும். இந்த மண்ணின் மைந்தர்கள்- வந்தேறிகள் அல்ல என்பதை நிலை நாட்டுவதாகும்.

அல்லாஹ்வின் உதவி அவன் நாடினால், எப்படியும் கிடைத்து விடும். அதற்காக அயோக்கியர்களை ஆதரித்துதான் முஸ்லிம்களின் நலன் நாட வேண்டும் என்ற அவசியமில்லை. ஷிர்க், ஹராமுக்கு துணை போய்தான் நமது உரிமையை பெற வேண்டும் என்றால் அத்தகைய உரிமைகளும் நமக்கு தேவையில்லை. கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதிகளுக்கு நீங்கள் அளிக்கக்கூடிய வாக்கு நாளை அல்லாஹ்விடத்தில் உங்களை கேள்விக்குரியதாக்கி விடும் என்பதை மறந்து விடாதீர்.

எனவே, 15 ஆண்டுகால தியாகவரலாற்றை கொண்டுள்ள நமது தமுமுக ஆதரவு பெற்ற சமூக ஜனநாயக கூட்டனியை வெற்றிபெறச்செய்யுங்கள். மறவாமல் இரயில் என்ஜின் சின்னத்தில் வாக்களியுங்கள். மற்ற தொகுதிகளுக்கு தமுமுக தனது அதிகாரப்பூர்வ வாரஇதழான மக்கள் உரிமையில் குறிப்பிட்டுள்ள வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்.