இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!
Showing posts with label கல்வி உரிமை தாய்மொழி கல்வித்துறை தமுமுக குவைத். Show all posts
Showing posts with label கல்வி உரிமை தாய்மொழி கல்வித்துறை தமுமுக குவைத். Show all posts

April 30, 2008

கல்வி உரிமை

சமமான சமுதாயம் உருவாக இன்றும் நம்மால் உணரப்படவேண்டிய காரணியாக இருப்பது கல்வி உரிமை தான். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 60 ஆண்டுகளுக்கு முன்பே இலவச மற்றும் கட்டயாக் கல்வியை வலியுறுத்தியது. கல்வியை ஒரு உரிமையாக ஏற்றுக் கொள்ளும் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டே 6 ஆண்டுகள ஆகிவிட்டன. ஆனால் கல்வியை உரிமையாக நடைமுறைப்படுத்துவதில் இன்னமும் தடைகள் இருக்கத்தான் செய்கின்றன. கல்வியில் பலர் சேருவது பெரிய சாதனையல்ல. ஆனால் சேருபவர்களில் பாதிப் பேர் பாதியில் அல்லது தொடக்கத்திலேயே விலகுவதும் சாதனையல்ல அல்லவா? இது தான் இன்றைய இந்திய கல்வியின் நிலை.

தரமான கல்வியை பெரும்பாலான இந்திய குழந்தைகள் பெறவில்லை என்று 11வதுஐந்தாண்டுத் திட்டம் மதிப்பிடுகிறது. செகண்டரி கல்வி நிலை வரையிலாவது அனைவரும் மிகத் தரமான கல்வியைப் பெற வேண்டும் என்பதே இன்று பெரும்பாலான கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

மிகச் சிறப்பான கல்வி தரும் நாடுகளாக 2005ம் ஆண்டில் பின்லாந்து, கனடா, கியூபா மற்றும் கொரியா நாடுகள் யுனெஸ்கோவால் பட்டியலிடப்படுகின்றன. மிகத்தரமான ஆசிரியர்களைக் கொண்டு தரமான கல்வியைத் தருவதில் முனைப்புடன் இந்தநாடுகள் தொடர்ந்து செயல்படுவதே இவற்றின் வெற்றிக்குக் காரணம். இந்த நாடுகள் தரமான கல்வியை எந்த பாகுபாடும் இன்றி சமமாக அனைவரும் பெறுவதை குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றன.

வளர்ந்த நாடுகள் என கருதப்படும் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இன்னமும் பொருளாதார ரீதியான சமமில்லாத சூழல் நிலவுவதால் இந்த நாடுகளில் உள்ள ஏழை மாணவர்களுக்கு தாங்க முடியாத மனப் பிறழ்வு இருப்பதாக அறியப்பட்டுள்ளது. எனவே தரமான கல்வியை பாகுபாடின்றி அனைவரும் பெற வேண்டும் என்பதே நமது அரசுக்கும் இந்த நாடுகளின் கல்வித்துறை சுட்டிக்காட்டும் உண்மை. அரசுப் பள்ளிகளை தரத்தில் மேம்படுத்துவதும், சிறப்பான தனியார் பள்ளிகளில் அனைவராலும் சேர முடிய வேண்டும் என்பதே நமது அரசின் முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும்.


இது போலவே மற்றொரு முக்கியமான அம்சம் தாய்மொழி புறக்கணிப்பு. கேந்திரிய வித்யாலயா போன்ற பள்ளிகளும் தனியார் பள்ளிகளும் தாய்மொழிக்கு எந்த முக்கியத்துவமும் தருவதில்லை. எனவே உண்மையான அறிவை மாணவர்கள் பெறுவதில் பெரும் தடைகள் இருக்கின்றன. 11வது ஐந்தாண்டு திட்டத்தில் இந்திய கல்வித்துறை கூடுதல் முனைப்புடனும் நோக்கத்தோடும் செயல்பட்டால் தான் கல்வியை உரிமையாக வரையறுக்கும் நமது நோக்கம் நிறைவேறும்.
இன்ஷா அல்லாஹ்