வேதாளை ஹாஜா என்று த.மு.மு.க.வில் அறியப்பட்ட கழகத்தின் தேர்தல் ஆணையர் ஹாஜா நஜ்முதீன் 11.7.2011 அன்று காலமானார், (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).
தமுமுகவின் துவக்கக் காலம் முதலே சமுதாயப் பணிகளில் தீவிர ஆர்வம் காட்டிய சகோதரர் வேதாளை ஹாஜா, கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
வடசென்னை மாவட்டத் துணைத் தலைவராக இருந்தார். இந்தியன் இஸ்லாமிக் மிஷனின் மேலாளராகவும் பிறகு, மக்கள் உரிமையின் மேலாளராகவும் பணியாற்றி, மாநில அமைப்புத் தேர்தல் ஆணையராக நியமிக்கப் பட்டார். சகோ.ஜுல்ஃபிகார் தலைமையில் மாநிலம் முழுவதும் அமைப்புத் தேர்தல்களை நடத்தி முடிக்க வேதாளை ஹாஜா உறுதுணை புரிந்தார்.
பொருளாதார நெருக்கடி, உடல்நலக் குறைவு இவற்றிக்கு மத்தியில் கழகப் பணிகளில் முழு ஆர்வம் காட்டி வந்தார். இவருக்கு நான்கு மகள்கள், ஒருவர ஆலிமா, ஒருவர் இளம் அறிவியல் விலங்கியலில் தங்கப்பதக்கம் வென்று முதுநிலை அறிவியலும் முடித்துள்ளார்.
கழகப்பணிகளுக்கு மத்தியில், குடும்பப் பொறுப்பையும் சிறப்புர கவனித்துள்ள இச்சகோதரர், திடீர் மாரடைப்பால் மரணித்துள்ளார். மறைவுச் செய்தி கேட்டு கழகத் தலைவரும் ராமநாதபுர சட்டமன்ற உறுப்பினருமான பேரா.டாக்டர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் வேதாளைக்கு விரைந்தார்.
தமுமுக மாநிலச் செயலாளர் மௌலா எம்.நாசர், ம.ம.க அமைப்புச் செயலாளர் மண்டல்ம் ஜெய்னுலாபிதீன் மற்றும் ராம நாதபுரம் சுற்றுப்புற மாவட்ட நிர்வாகிகள் நல்லடக்கத்திற்குச் சென்றனர்.
பேரா.ஜவாஹிருல்லாஹ் ஜனாஸா தொழுகை நடத்தினார். திரளான மக்கள் ஜனாசத் தொழுகையிலும், நல்லடக்கத்திலும் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment