தமிழகத்தில் மதுக்கடைகளை அரசே டாஸ்மாக் மூலம் நடத்துவதால் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் குடும்பங்கள் சீரழிகிறது. எனவே மதுக்கடைகளை மூடக்கோரி தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மனித நேய மக்கள் கட்சி அறிவித்து இருந்தது.
அதன்படி மாநிலம் தழுவிய அளவில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
திருச்சியிலும் மறியல் போராட்டம் நடந்தது. மத்திய பஸ் நிலையம் அருகே நடந்த இந்த பேராட்டத்துக்கு போராட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜவாகிருல்லா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பஷீர் அகமது, பொருளாளர் உபயதுல்லா, துணை செயலாளர்கள் நியாசின், முகமது, தி.மு.க. மாவட்ட தலைவர் அப்துல்ஹக்கீம், செயலாளர் பயஸ்அகமது மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் காஜாமைதீன், கமருதீன், அப்தலகாதர், அமீர்பாஷா, இம்தியாஸ் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் திரளான பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் மறியலுக்கு முயன்றபோத போலீசார் அவர்களை கைது செய்தனர். 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
மறியலை முன்னிட்டு மத்திய பஸ் நிலையத்தில் காலையிலேயே போலீசார் குவிக்கப்பட்டனர். துணை கமிஷனர் ராஜசேகரன், இன்ஸ்பெக்டர் டென்னிஸ் இளங்கோவன் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போக்கு வரத்தும் மாற்றி விடப்பட்டது.
No comments:
Post a Comment