இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

February 22, 2010

அதிக பயணிகள் செல்வதால் திருச்சி விமான நிலையம் இந்தியாவிலேயே முதலிடம்


திருச்சி விமான நிலையம், இந்தியாவில் உள்ள பழமையான விமான நிலையங்களில் ஒன்றாகும். முதலில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இந்தியன் ஏர்லைன்ஸ் போன்ற விமான நிறுவனங்கள் விமான சேவையை இயக்க தொடங்கின. தற்போது கிங்பிஷர், பாரமவுண்ட் ஏர்வேஸ், மிகின் லங்கா, ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் ஏசியா போன்ற விமான நிறுவனங்கள், விமான சேவையை வழங்கி வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் பயணிகள் போக்குவரத்தில் திருச்சி விமான நிலையம் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. பல விமானங்களை ரத்து செய்துள்ள நிலையிலும் திருச்சி விமான நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பயணிகள் போக்கு வரத்தை பயணிகள் பொறுத்தவரை இந்தியாவில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் 2008 வரை, சர்வதேச விமான பயணிகள் போக்குவரத்து 1 கோடியே 78 லட்சத்து 23 ஆயிரத்து 936 ஆக உள்ளது. உள்நாட்டு போக்குவரத்தில் 4 கோடியே 55 லட்சத்து 70 ஆயிரத்து 969 பயணிகள் சென்றனர். 2009-ம் ஆண்டு ஏப்ரல்-அக்டோபரில் சர்வதேச விமான பயணி களின் எண்ணிக்கை 1 கோடியே 90 லட்சத்து 3 ஆயிரத்து 688 ஆகும். இது 6.6. சதவீத வளர்ச்சியாகும்.

உள்நாட்டு விமான பயணிகள் போக்குவரத்தை பொறுத்தவரை 4 கோடியே 98 லட்சத்து 94 ஆயிரத்து 894 பேர் பயணம் செய்துள் ளனர். இது 9.5 சதவீத வளர்ச்சியாகும்.

இதில் திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2008 ஏப்ரல் -அக்டோபரில் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை 1 கோடியே 99 லட்சத்து 171 ஆகவும், உள்நாட்டு பயணிகள் 52 ஆயிரத்து 838 ஆகவும் உள்ளது. இதே போன்று 2009-ல், சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை 3 கோடியே 29 லட்சத்து 232 ஆகவும், உள்நாட்டு பயணிகள் போக்குவரத்து 63 ஆயிரத்து 81 ஆகவும் உள்ளது. இது 55.7 சதவீத வளர்ச்சியாகும்.

இந்தியாவில் உள்ள விமான நிலையங்களிலேயே திருச்சி விமான நிலையம் தான் அதிகபட்ச வளர்ச்சியை பெற்றுள்ளது. இதே போல விமான போக்குவரத்தை பொறுத்த வரை 28.2 சதவீத வளர்ச்சியை திருச்சி பெற்றுள்ளது.

இந்தியாவிலேயே பயணிகள் போக்குவரத்தில் முதலிடம் பிடித்துள்ளது திருச்சிக்கும், திருச்சி பகுதி பயணிகளுக்கும் பெருமை சேர்த்துள்ளது.

மேலும் அபரிதமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் திருச்சி விமான நிலையத்திற்கு, சர்வதேச அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று பயணிகள்-பொதுமக்களின் நீண்ட கால விருப்பமாகும்.

கோவையில இருந்து டெல்லிக்கு கூடுதலாக விமான சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கோவை-திருச்சி -டெல்லி என்று விமான சேவை தொடங்க வேண்டும் என்றும், நிறுத்தப்பட்ட சார்ஜா விமான சேவையையும் தொடர வேண்டும் என்று வர்த்தகர்கள், பயணிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.

No comments: