விண்ணப்பம் வரவேற்பு: தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு "டாம்கோ' நிறுவனத்தின் தனிநபர் கடன் திட்டம் மூலம் கடன் அளிக்கப்படுகிறது. சுய உதவிக்குழுக்கள் மூலம் சிறுகடன்கள் வழங்கப்படுகின்றன. சிறுபான்மை சுய உதவிக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள மகளிருக்கு அதிகபட்சம் ரூ. 10 ஆயிரம் கடன் வழங்கப்படுகிறது. பயனாளிகள் முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர் மற்றும் பார்ஸி இனத்தை சேர்ந்தர்களாக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் கிராமப் பகுதியினராக இருந்தால், ரூ.39 ஆயிரத்து 500க்கு மேற்படாமலும், நகர பகுதியினராக இருந்தால், ரூ.54 ஆயிரத்து 500க்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப படிவம் மத்திய கூட்டுறவு வங்கி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகத்தில் கிடைக்கும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், ரேஷன் கார்டு அல்லது இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.தேர்வுக்குழுவின் ஒப்புதல் மற்றும் வங்கி பரிந்துரை ஆகியவற்றை பெற்று, "டாம்கோ' ஆணை பிறப்பித்து வங்கி மூலம் கடன் வழங்கும். திட்ட மதிப்பு ரூ. ஒரு லட்சத்துக்கு உட்பட்டிருப்பின் தகுதியின் அடிப்படையில் "டாம்கோ' ஒப்புதல் வழங்கும். ரூ. ஒரு லட்சத்துக்கு மேற்படின் தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி கழகத்தின் முன்னுரிமை பெற்று கடன் வழங்கப்படும். தமிழகத்தில் வசிக்கும் சிறுபான்மை இனத்தவர்கள், கடன் பெற்று பயனடைய வேண்டுமென விரும்புகின்றோம்.
No comments:
Post a Comment