கல்வியே உலகத்தை மீட்டெ டுக்கும்!
கண்டத்தின் பிளவுகளை இணைத்து வைக்கும்!
பல்கலையின் தொழில்வளத்தால் உலக மக்கள்
பசி போக்கும்! அறியாமை இருள் அகற்றும்!
வல்லவர்கள் வளர்ந்தோங்க பகைமை நீங்கும்!
வாழ்வாங்கு வாழ்விக்கும்! வானம் போல,
எல்லையிலை கல்விக்கும்! எல்லை யின்றி
இருக்கின்ற வானத்தை முட்டித் தள்ளும்!
அண்டத்தைத் தாண்டுகின்ற ஆற்றல் என்றால்,
ஆழ்கடலைத் துளைக்கின்ற திறமும் என்றால்,
துண்டாகக் குன்றத்தைத் துவைக்கும் என்றால்,
துவளாத கல்விக்கே எல்லாம் என்பேன்!
வண்டாக வானத்தைச் சுற்றிச் சுற்றி
வருகின்ற கல்விக்கு வானம் பந்து!
செண்டாக இருக்கின்ற சிகரத் துக்கும்
சிறப்பில்லை! கல்விக்கே சிறப்பு என்பேன்!
மந்திரத்தால் மயங்காத கல்வி, வானில்
மரமாகிப் பழம்கொடுக்கும் காலம் இன்று!
விந்தைகளை முந்துகின்ற தந்தி ரத்தின்
விதைகளால் முளைக்கின்ற கல்வி, வானச்
சந்திரனைக் கண்டவுடன் செவ்வாய் தன்னைச்
சந்திக்கச் செல்கின்ற கல்வி முன்னால்,
சுண்டுவிரல் போன்றிருக்கும் வானம்! கல்விச்
சூழ்கின்ற ஆற்றலுக்கே வானம், எல்லை!
March 26, 2008
கல்விக்கு வானமே எல்லை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment