இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

March 30, 2008

மேம்பாலம் திறப்பு விழா

சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலை மற்றும் மகாலிங்கபுரம் கோடம்பாக்கம் நெடுஞ்சாலை சந்திப்பில் ரூ. 10 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலம். பணி முடிந்து திறப்பு விழாவை முன்னி்ட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.

ஐ.டி. நிறுவனங்கள் சந்திக்கும் பயோடேட்டா பிரச்னை

இந்திய ஐ.டி. நிறுவனங்கள் தற்போது சந்திக்கும் முக்கியமான பிரச்னைகளுல் ஒன்று பொய் தகவல்களோடு கூடிய பயோடேட்டா தான்.
பொதுவாக ஐ.டி. நிறுவனங்களின் தொடக்க வேலைகளுக்காக விண்ணப்பிப்பவர்கள் தங்களது திறன்களைப் பற்றி தரும் பயோ டேட்டாக்களை எப்படி வடிகட்டி உண்மையை சரி பார்ப்பது என்பது இந்த நிறுவனங்களுக்கு பெரிய பிரச்னையாக இருக்கிறது. அனுபவம் தொடர்பாகவே பொதுவாக பொய்கள் கூறப்படுவதாக ஐ.டி. நிறுவனங்கள் கருதுகின்றன.
புதிதாக ஒருவரை பணிக்கு எடுத்துக் கொள்ளும் போது இதை உறுதி செய்து கொள்வது அடிப்படையான பிரச்னையாக இருக்கிறது. இப்படி பொய் தகவல்களை தந்திருப்பவரை பணிக்கு எடுத்துக் கொள்ளும் போது அவர்களிடமிருந்து பெறப்படும் சேவையும் தரமில்லாததாக அமைகிறது.
இதை சரி செய்வதற்கான முயற்சிகளில் ஏற்கனவே விப்ரோ போன்ற நிறுவனங்கள் இறங்கி விட்டன.
வேலைக்கு திறன் வாய்ந்தவர்களை எடுத்துக் கொள்வதை அவுட்சோர்சிங் செய்வதற்கான கணக்கீடுகளை ஏற்கனவே ஐ.டி. நிறுவனங்கள் செய்து வருகின்றன.

யூனியன் பாங்க் அறிவித்துள்ள 1000 கிளார்க் பணியிடங்கள்

முன்னணி பொதுத் துறை பாங்குகளில் ஒன்றான யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாகவுள்ள ஆயிரம் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் கிளார்க் பணிக்கான நேர்முகத் தேர்வை நடத்தியிருக்கும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா மீண்டும் ஆயிரம் இடங்களை அறிவித்திருப்பதால் போட்டித் தேர்வு எழுதும் எண்ணற்ற இளைஞர்களுக்கு இது மற்றுமொரு நல்ல செய்தியாக அமைகிறது. இனி இது பற்றிய விபரங்கள்

காலியிட விபரம்:
ஆந்திரா 56, குஜராத் 82, கேரளா 61, ம.பி. 68, மகாராஷ்டிரா 72, மும்பை 60, உ.பி., 207 மற்றும் தமிழகம் 78, கர்நாடகா 39 மற்றும் மே. வங்கம் 38. குறைந்தது 38 காலியிடங்கள் இருக்கும் மாநிலங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. இவை கூடவோ குறையவோ செய்யலாம்.
எந்த மாநிலத்தின் காலியிடத்துக்காக விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ அந்த மாநில மொழியில் பேச, எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
அந்த மாநிலத்தில் உருவாக்கப்படும் போட்டித் தேர்வு மையங்களில் மட்டுமே தேர்வை எழுத முடியும்.

தகுதிகள்:

  • பிப்ரவரி 29, 2008 அன்று 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., உடல் ஊனமுற்றோர் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு வழக்கமான மத்திய அரசு வயது சலுகைகள் தரப்படும்.
  • பட்டப்படிப்பு ஒன்றில் தேர்ச்சி அல்லது +2ல் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி.
  • அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்திலிருந்து குறைந்தது 60 மணி நேர கம்ப்யூட்டர் படிப்பைப் படித்திருக்க வேண்டும். ஆபீஸ் ஆட்டோமேஷன் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
  • இந்தத் தகுதிகளை பிப்ரவரி 29, 2008 அன்று பெற்றிருப்பது முக்கியம்.

தேர்வு முறை:

  • இதற்கான போட்டித் தேர்வில் அப்ஜக்டிவ் மற்றும் விரிவாக விடையளிக்கும் தாள்கள் இடம் பெறும். இதில் தகுதி பெறுவோருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.
  • அப்ஜக்டிவ் தாளில் ரீசனிங், நியூமரிகல் எபிலிடி, கிளரிக்கல் ஆப்டிடியூட், ஆங்கிலத் திறன் ஆகியவற்றில் கேள்விகள் அமையும்.
  • தலா 50 கேள்விகள் இவற்றில் கேட்கப்படும். கணிதம் மற்றும் ரீசனிங்கிற்கு தலா 75 மதிப்பெண்களும் பிற 2 பகுதிகளுக்கு தலா 50 மதிப்பெண்களும் தரப்படும். ஆங்கிலத்தில் பாஸ் செய்தால் போதும்.
  • தவறான பதில்களுக்கு நெகடிவ் மதிப்பெண்கள் கழிக்கப்படும்.
  • ஒரு மணி நேரத்தில் விரிவாக விடையளிக்கும் பகுதிக்கு விடையளிக்க வேண்டும்.
  • தமிழகத்தில் சென்னையில் மட்டுமே இந்தத் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பக் கட்டணம் ரூ.300. எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்றோர் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.75. டிடியானது யூனியன் பாங்க் ஆப் இந்தியா ரெக்ரூட்மென்ட் புராஜக்ட் என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்கதாக எடுக்கப்பட வேண்டும்.
  • டிடியின் பின்புறம் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி ஆகியவை தவறாமல் எழுதப்பட வேண்டும்.
  • விண்ணப்பப் படிவத்தையும் முழு விபரங்களையும் பாங்கின் http://www.unionbankofindia.co.in இன்டர்நெட் தளத்திலிருந்துடவுண்லோடு செய்து கொள்ளலாம். மேலும் இவற்றை எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழிலும் பார்த்துக் கொள்ளலாம். இதை கடைகளிலிருந்தும் பெறலாம்.
  • பிறந்த தேதி, தகுதிகள், திறன்கள், ஜாதி போன்றவற்றுக்கான சான்றிதழ்களின் அட்டெஸ்டட் நகல்களை இணைத்து விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும்.
  • விண்ணப்பமானது சாதாரண தபால் மூலமாகத் தான் அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

UNION BANK CLERICAL RECRUITMENT PROJECT – 2008,

Post Office Box No.7647,

Malad (West) Post Office,

MUMBAI 400064.

தேர்வுகள் ஞாபகம் இருக்கிறதா...!

  • எஸ்.எஸ்.சி., கம்பைன்ட் மெட்ரிக் லெவல் தேர்வு மார்ச் 30
  • இந்தியன் பாங்க் ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்ஸ் தேர்வு மார்ச் 30
  • எஸ்.எஸ்.சி., ஜூனியர் இன்ஜினியர் தேர்வு ஏப்ரல் 27
  • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பி.ஓ., தேர்வு ஏப்ரல் 27
  • பஞ்சாப் நேஷனல் பாங்க் பல்வேறு பணிகளுக்கான தேர்வு மே 4
  • இந்தியன் ஓவர்சீஸ் பாங்கில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான கிளரிக்கல் தேர்வு மே 11
  • யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீசஸ் முதனிலைத் தேர்வு மே
  • யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீசஸ் முதனிலைத் தேர்வு மே 18
  • எஸ்.எஸ்.சி., ஸ்டாடிஸ்டிகல் இன்வெஸ்டிகேட்டர் தேர்வு மே 25
  • யு.பி.எஸ்.சி., இன்ஜினியரிங் சர்வீஸ் தேர்வு ஜூன் 7
  • யு.பி.எஸ்.சி., வனச் சேவைத் தேர்வு ஜூலை 12

தேர்வுகளை நினைவிற்க்கொண்டு தவறாமல் கலந்து கொண்டு வெற்றி பெற துஆ செய்கின்றோம்.

March 26, 2008

கல்விக்கு வானமே எல்லை!

கல்வியே உலகத்தை மீட்டெ டுக்கும்!
கண்டத்தின் பிளவுகளை இணைத்து வைக்கும்!
பல்கலையின் தொழில்வளத்தால் உலக மக்கள்
பசி போக்கும்! அறியாமை இருள் அகற்றும்!
வல்லவர்கள் வளர்ந்தோங்க பகைமை நீங்கும்!
வாழ்வாங்கு வாழ்விக்கும்! வானம் போல,
எல்லையிலை கல்விக்கும்! எல்லை யின்றி
இருக்கின்ற வானத்தை முட்டித் தள்ளும்!

அண்டத்தைத் தாண்டுகின்ற ஆற்றல் என்றால்,
ஆழ்கடலைத் துளைக்கின்ற திறமும் என்றால்,
துண்டாகக் குன்றத்தைத் துவைக்கும் என்றால்,
துவளாத கல்விக்கே எல்லாம் என்பேன்!
வண்டாக வானத்தைச் சுற்றிச் சுற்றி
வருகின்ற கல்விக்கு வானம் பந்து!
செண்டாக இருக்கின்ற சிகரத் துக்கும்
சிறப்பில்லை! கல்விக்கே சிறப்பு என்பேன்!

மந்திரத்தால் மயங்காத கல்வி, வானில்
மரமாகிப் பழம்கொடுக்கும் காலம் இன்று!
விந்தைகளை முந்துகின்ற தந்தி ரத்தின்
விதைகளால் முளைக்கின்ற கல்வி, வானச்
சந்திரனைக் கண்டவுடன் செவ்வாய் தன்னைச்
சந்திக்கச் செல்கின்ற கல்வி முன்னால்,
சுண்டுவிரல் போன்றிருக்கும் வானம்! கல்விச்
சூழ்கின்ற ஆற்றலுக்கே வானம், எல்லை!

March 22, 2008

22-03-2008 இன்று சர்வதேச தண்ணீர் தினம்!

"தண்ணீர் தினம்' இன்று சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு "தண்ணீரும் சுத்தமும்' என்ற தலைப்பில் கருத்துக்கள் வலியுறுத்தப்படுகின்றன.
உலகின் நான்கில் மூன்று பங்குப் பகுதியை தண்ணீர்தான் ஆக்கிரமித்திருக்கிறது. ஆனால், இதில் நல்ல தண்ணீர் 2.7 சதவீதம் மட்டுமே. நல்ல தண்ணீரில் 75 சதவீதம் துருவப்பகுதிகளில் பனிக்கட்டியாக உறைந்திருப்பதால் இதற்காக நாம் ஆறுகளையும் நிலத்தடி நீரையும் பெரிதும் நம்பியிருக்கிறோம். ஆற்றுத் தண்ணீர் மற்றும் நிலத்தடியில் உள்ள நீர் இரண்டுமே மாசுபட்டு வருகின்றன. நகரக் கழிவுகள் அனைத்தும் ஆறுகளில் விடப்படுவதால் அந்த கழிவுகளுடனே அடுத்த நகர்ப்பகுதியை ஆறு சென்று அடைகிறது. இறுதியில் கழிவுநீர் குட்டையாகவும், நோய்க்கிருமிகளின் புகலிடமாகவும் மாறும் ஆறுகள் அதிகரித்து வருகின்றன. தொழிற்சாலைகளாலும் அதிகப்படியான பயன்பாட்டினாலும் நிலத்தடி நீர்வளமும் மாசுபட்டு வருகிறது.
நீர்மாசுபாட்டினால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. குழந்தைகள் மற்றும் முதியோர்களின் உயிருக்கு இது ஆபத்தாக முடிந்துவிடுகிறது. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் வயிற்றுப்போக்குக்கு பலியாகின்றனர்.
குடிக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும். கிருமிகளை அழிக்க, கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். உலகம் முழுவதும் நல்ல தண்ணீருக்கு பிரச்னைகள் இருக்கின்றன. நீர்வளமும் குறைந்து கொண்டு வருகிறது. ஆகவே, பிரச்னைகளை தீர்க்கும் முகமாக நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உலகின் 620 கோடி மக்கள் தொகையில் நூறு கோடிப் பேருக்கு நல்ல தண்ணீர் இன்னுமும் கிடைக்கவில்லை. தண்ணீர் தொடர்பான நோய்களாலேயே ஒவ்வொரு 15 வினாடிக்கு ஒருமுறை ஒரு குழந்தை இறக்கிறது. ஆண்டுக்கு 18 லட்சம் பேர் வயிற்றுப்போக்கால் இறக்கின்றனர். 260 கோடி மக்கள் சுத்தமின்மையால் நோய்க்கு ஆளாகியுள்ளனர். மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளில் 50 சதவீதத்தினருக்கு தண்ணீர் தொடர்பான நோய்கள் இருக்கின்றன.
கழிப்பிடமாக மாறும் சாலையோரங்கள்! : பாதுகாப்பான குடிநீர், சுத்தம் மற்றும் சுகாதாரம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று திருச்சியில் "கிராமாலயா' எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் செயல்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் இந்நிறுவனம் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை வலியுறுத்தி வருகிறது. திறந்தவெளி மற்றும் சாலை ஓரங்கள் நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் கழிப்பிடமாக மாறியுள்ளன.
இவை சுற்றுப்புறத் துõய்மையை பாதிப்பதோடு, நோய் பரப்பும் இடமாகவும் மாறுகின்றன. இதை ஒழிக்க "கிராமாலயா' சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. திருச்சிப் பகுதியில் 186 சேரிகளில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக பொது சுகாதார கழிப்பிடங்களுக்கு இந்நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதுபோன்ற திட்டங்கள் ஒவ்வொரு கிராமத்திலும் துவக்கப்பட வேண்டும்.

March 17, 2008

தமுமுக - குவைத் புகைப்பட தளம்

காணுங்கள்

வீடியோ

முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மஸ்கட் வாழ் தமிழ் முஸ்லிம்கள் சார்பாக ஆண்டு தேறும் தாய்த் தமிழகத்திலுள்ள வசதி குறைந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி செய்து வருகின்றார்கள்.
பள்ளிப் படிப்பு முடிந்து மேல்நிலைப் பள்ளிப்படிப்பு (+2), பட்டயப்படிப்பு , பட்டப் படிப்பு , தெழில் கல்வி, மார்க்க கல்வி பயில பெருளாதார வசதி குறைந்த முஸ்லிம் மாணவ லி மாணவியர் தங்கள் விண்ணப்பங்களைக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பித் தறுமாறு கேட்டுக்கெள்ளப் படுகின்றார்கள்.
கல்வி நிதி கேட்டு விண்ணப்பம் அனுப்புவோர் தவறாமல் தங்களுடைய மதிப்பென் சான்றிதழின் (Xerox) புகைப்பட நகல், அவர்கள் சார்ந்திருக்கும் ஜமாஅத் தலைவர் / செயலாளரிடமிருந்து வசதியின்மை குறித்து பரிந்துரைக் கடிதம், எந்த படிப்பு படிக்க இருக்கிறார்கள், அதற்கு எதிர்பார்க்கப்படும் கல்விக் கட்டணம் எவ்வளவு ஆகியவைகளை இணைத்து அனுப்புதல் வேண்டும். இந்த இணைப்புகள் இல்லாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்து கெள்ளப்பட மாட்டாது.
தகுதியும் ஆர்வமும் இருந்தும் வசதிக் குறைவால் படிக்க இயலாத தமிழ் முஸ்லிம் மாணவ மாணவியருக்கு உதவிட இந்த படிவத்தை முடிந்த வரை நகல் எடுத்து பள்ளிவாயில், கல்விக் கூடங்கள், பெதுநல அமைப்புகளுக்கெல்லாம் அனுப்பிக் கெடுத்து பயன்பெறச் செய்யுங்கள்!! இறையருள் பெருங்கள்!!.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
TAMAM,

P.O BOX 1263,

MUTTRAH - 114,

SULTANATE OF OMAN.

கடைசி தேதி: 30-05-2008

அரசுக்கு தமுமுக இரண்டு மாதம் அவகாசம்


மார்ச் 16 அன்று கடையநல்லுரில் பாளை அப்துல்ரஷீது வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யவும் உடனடியாக கருணை தொகையை வழங்கிட வலியுறுத்தி கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இதில் தமுமுக தலைவர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ், துணை பொது செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி, மாநிலத் துணைச் செயலாளர் மைதீன் சேட்கான் ஆகியோர் சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட தலைவர் ரபீக், மாவட்ட செயலாளர் உஸ்மான்கான், மாவட்ட பொருளாளர் செய்யது அலி, உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.
பாளை அப்துல்ரஷீது வழக்கில் உண்மை குற்றவாளிகளை வெளிக்கொணருவும், அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை ரூ.2 லட்சத்தை உடனடியாக வழங்கிடவும் அரசிற்கு இரண்டு மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. அரசு மேலும் காலதாமதப் படுத்தினால் தமுமுக கடுமையான போராட்டங்களில் ஈடுபடும் என அரசிற்கு இப்பொதுக் கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்தது. இப்பொதுக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

மின்ணணு நூலகம் - DATA DVD

அன்பார்ந்த குவைத் சகோதரர்களுக்கு....!
அநேக சகோதரர்கள் மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டதற்கிணங்க, இணைய வசதி இல்லாதவர்களுக்காக வெளியிடப்பட்ட "மின்ணணு நூலகம்" 4ஆம் பதிப்பு ('DATA DVD' Only Computer) இலவசமாக குவைத் சிட்டி மிர்காப் லக்கி வீடியோவில் வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் சகோதரர்கள் அங்கே அணுகி பெற்றுக் கொள்ளலாம்.
அட்ரஸ்:

சகோதரர் தீன் அவர்கள்

லக்கி வீடியோஸ் - முவாஸ் பில்டிங் - முர்காப்

மொபைல்: 6262349