இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

November 17, 2007

அல்லாஹ்வின் பெயரில் பதவி பிரமாணம்..!

"கேரள மாநில எம்.எல்.ஏ.,க்கள் 13 பேர் அல்லாவின் பெயரில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டதில் எவ்வித தவறும் இல்லை' என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. எம்.எல்.ஏ. க்கள் பதவிப் பிரமாணத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்தது.


கேரள சட்டசபைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்தது. இதில் வெற்றி பெற்ற முஸ்லிம் லீக் மற்றும் காங்., கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் 13 பேர், அல்லாவின் பெயரில் பதவி பிரமாணம் எடுத்து கொண்டனர். இதை எதிர்த்து கேரள பா.ஜ., இளைஞர் அணி துணை தலைவரான மது பருமலா, கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த கேரள ஐகோர்ட் இவ்வழக்கை தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து மது பருமலா சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ஆர்.வி.ரவீந்திரநாத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இதை விசாரித்தது.

கோர்ட்டில் ஆஜரான மனுதாரரின் வக்கீல், "இந்திய அரசியல் சட்டம் 188 வது பிரிவு மூன்றாவது அட்டவணையின்படி எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்கும் போது கடவுளின் பெயராலே தான் உறுதி மொழி எடுத்து கொள்ள வேண்டும். ஆனால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் காங்., கட்சியை சேர்ந்த எம்.எம்.ஏ.,க்கள் 13 பேர் அல்லாஹ்வின் பெயரில் உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர். இது அரசியல் சட்டப்படி செல்லாது என அறிவிக்க வேண்டும்' என்று அவர் கோரியிருந்தார்.


அப்போது, நீதிபதிகள் கூறுகையில், "அரபி மொழியில் அல்லா என்றால் கடவுள் என அர்த்தம். படிப்பறிவு இல்லாத மற்றும் ஆங்கில மொழி தெரியாதவர்களுக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட பதவி பிரமாணத்தின் நகல்கள் வழங்கப்பட்டு அவர்கள் படிக்கின்றனர். இதை அரசியல் சட்டத்தை மீறியதாக எப்படி கூறலாம்? எனவே, அல்லாவின் பெயரில் பதவி பிரமாணம் எடுப்பதில் தவறு இல்லை,'' என்று தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

No comments: