இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

November 29, 2007

மாபெரும் கண்டனக்கூட்டம் - தமுமுக - குவைத்

அழைப்பிதழ்

தமுமுக - குவைத் மாபெரும் கண்டனக்கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...
கடந்த 23-11-2007 அன்றைய நன்றி அறிவிப்பு மாநாட்டைத் தொடர்ந்து எதிர்வரும் 07-12-2007 வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு பாபர் மசூதி இடிப்பு வழக்கு நிலுவை குறித்து மாபெரும் கண்டனக்கூட்டம் முர்காப் பகுதியில் தஞ்சை உணவகத்தில் தமுமுக - குவைத் மண்டலத்தின் சார்பாக நடைபெற உள்ளது. ஈருலகிலும் வெற்றி பெற அனைவருக்காகவும் துஆ செய்யவும்.
தமுமுக - குவைத் மண்டலம்
Instantly Visit our Web: http://www.q8tmmk.blogspot.com/

November 28, 2007

வாக்காளர் அட்டைக்கு பதிவு செய்யுங்கள்


உங்களது பழைய வாக்காளர் அட்டையை சரிபார்க்கவும், புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கவும் உள் நுழையுங்கள்:

November 26, 2007

குவைத் தமுமுகவின் நன்றி அறிவிப்பு மாநாடு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்ம...)
குவைத் நாட்டில் தமுமுக - குவைத் மண்டலத்தின் சார்பாக இஸ்லாமியர்களுக்கும், கிருஸ்த்தவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு அளித்த தமிழக அரசுக்கு நன்றி பாராட்டும் வகையில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு ''நன்றி அறிவிப்பு மாநாடு" ஏற்பாடு செய்யப்பட்டது. தலைமை யிலிருந்து மாநாட்டுக்கான தேதியை அறிவிப்பு செய்தவுடனேயே இதற்கான ஆயத்த வேலைகள் துவங்கப்பட்டன. குவைத் முர்காப் சிட்டியில் தஞ்சை உணவகத்தில் ஷஹீத் ராஜாமுஹம்மது நினைவு அரங்கத்தில் கடந்த 23-11-2007 அன்று இரவு 8:00 மணிக்கு மாநாடு துவங்கப்பட்டது. பொருளாளர் சகோ. ஃபஜ்லுர்ரஹ்மான்-திருச்சி அவர்கள் கிராஅத் ஓதி மாநாட்டை துவக்கி வைத்தார். சகோ. கலீல்ரஹ்மான்-எருமப்பட்டி அவர்கள் வரவேற் புரையாற்றி மண்டலத்தலைவர் அமானுல்லாஹ்-திருச்சி அவர்களை தலைமையுரையாற்ற அழைத்தார்.

தலைமையுரையில் 60 ஆண்டுகால கனவு, 12 ஆண்டுகால போராட்டம், 16 மாத திட்டம், 12 நிமிடங்களில் நிறைவேறிய அவசரச்சட்டத்தில் இந்தத் தனி இடஒதுக்கீட்டை அறிவித்த கலைஞர் அவர்களுக்கும், இடஒதுக்கீட்டையும், சிறைவாசிகளின் விடுதலையையும் கோரிக்கையாக வைத்து திமுகவுடனான கூட்டனிக்கு திட்டமிட்டு அதன்படி உழைத்து வெற்றிபெறச்செய்த தமுமுக தலைமை முதல் அடித்தொண்டன் வரை அனைவருக்கும் நன்றி கூறினார்.

சிறப்பு அழைப்பாளராக தமுமுக-ரியாத் மண்டல செயலாளர் சகோ. ஷாநவாஸ்-லால்குடி அவர்களும், குவைத் - தமிழ் கிருஸ்த்தவ திருச்சபையின் தலைவர் சகோ. ஹெர்பர்ட் சத்தியதாஸ்-நாகர்கோயில் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். குவைத்தில் அனைவருக்கும் அறிமுகமான நீண்டகாலமாக சமுதாயத்தொண்டாற்றி வரும் பேரா. தாஜ்தீன்-புதுஆத்தூர் அவர்களும் தங்களது உரையில் பெற்றுள்ள இடஒதுக்கீட்டை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விளக்கி பேசினார்கள்.

மறைந்த இணைச்செயலாளர் ராஜாமுஹம்மது அவர்களின் அன்புச்சகோதரர் சகோ. முபாரக்அலி-லால்குடி அவர்கள் கலந்துகொண்டு பணியாற்றிய டெல்லிப்பேரணி, சிறைநிரப்பும் போராட்டம், இரண்டு வாழ்வுரிமை மாநாடுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகளையும் அரங்கம் நெகிழ அழகாக எடுத்துரைத்தார். குவைத் மண்டல இணைச்செயலாளர் சகோ. தமீம் அன்சாரி-முத்துப்பேட்டை அவர்களின் நன்றியுரையோடு மாநாடு இனிதே நிறைவுபெற்றது. மாநாட்டிற்கு பல்வேறு இஸ்லாமிய, தமிழ், கிருஸ்த்துவ அமைப்புகளில் இருந்தும் பெருந்திரளாக வந்திருந்து விழாவைச் சிறப்புச் செய்தனர்.


அதே மாநாட்டில் டிசம்பர் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை மவ்லவி பி.அப்துல்ரஹீம் நினைவு அரங்கத்தில் நடைபெறவுள்ள பாபர்மசூதி கண்டனக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதோடு இதுவரை ரியாத் மண்டலத்தில் செயலாளராக பணியாற்றிய சகோ. ஷாநவாஸ் அவர்கள் அனைவரின் விருப்பத்திற்கிணங்க குவைத் மண்டலத்தில் மண்டலச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இரவு தேனீர் விருந்தோடு மாநாடு 10:30 மணிக்கு இனிதே நிறைவடைந்தது.
News from:
TMMK - Media Group
Kuwait

November 24, 2007

உற்சாகத்துடன் நடந்த "நன்றி அறிவிப்பு மாநாடு"



"விரைவில் செய்திகள்"


படத்தில்: குவைத் மண்டல தமுமுக தலைவர் சகோ. அமானுல்லாஹ் அவர்களின் தலைமையுரை யின் போது, மேடையில் குவைத் - தமிழ் கிருஸ்த்தவ திருச்சபை தலைவர் சகோ. ஹெர்பட் சத்தியதாஸ் அவர்களும், ரியாத் மண்டல தமுமுக செயலாளர் சகோ. ஷானவாஸ் அவர்களும்..,

November 19, 2007

தமுமுக-வின் திருச்சி மாவட்ட, மாநகர புதிய அலுவலகம்:

திருச்சி பாலக்கரை மதுரை ரோட்டில் உள்ள எம்.ஜி. காம்ப்ளக்ஸ் முதல் தளத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாவட்ட, மாநகர புதிய அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா 18-11-2007 காலை நடந்தது.


விழாவில் மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சவுதி கிழக்கு மண்டல தலைவர் சபியுல்லாஹ்கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாநில துணைச் செயலாளர் ஹாஜாகனி வாழ்த்துரை வழங்கினார்.


திருச்சி மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கீம், செயலாளர் அப்துல் ரஹீம், பொருளாளர் பைஸ் அஹம்மது, துணைத்தலைவர் ஹபிபுல்லாஹ், துணை செயலாளர் அப்துல் சமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


விழாவில் த.மு.மு.க. திருச்சி மாவட்ட, மாநகர நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை த.மு.மு.க. திருச்சி மாவட்ட, மாநகர நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
தமுமுக-திருச்சி மாவட்டம்

November 17, 2007

அல்லாஹ்வின் பெயரில் பதவி பிரமாணம்..!

"கேரள மாநில எம்.எல்.ஏ.,க்கள் 13 பேர் அல்லாவின் பெயரில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டதில் எவ்வித தவறும் இல்லை' என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. எம்.எல்.ஏ. க்கள் பதவிப் பிரமாணத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்தது.


கேரள சட்டசபைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்தது. இதில் வெற்றி பெற்ற முஸ்லிம் லீக் மற்றும் காங்., கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் 13 பேர், அல்லாவின் பெயரில் பதவி பிரமாணம் எடுத்து கொண்டனர். இதை எதிர்த்து கேரள பா.ஜ., இளைஞர் அணி துணை தலைவரான மது பருமலா, கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த கேரள ஐகோர்ட் இவ்வழக்கை தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து மது பருமலா சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ஆர்.வி.ரவீந்திரநாத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இதை விசாரித்தது.

கோர்ட்டில் ஆஜரான மனுதாரரின் வக்கீல், "இந்திய அரசியல் சட்டம் 188 வது பிரிவு மூன்றாவது அட்டவணையின்படி எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்கும் போது கடவுளின் பெயராலே தான் உறுதி மொழி எடுத்து கொள்ள வேண்டும். ஆனால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் காங்., கட்சியை சேர்ந்த எம்.எம்.ஏ.,க்கள் 13 பேர் அல்லாஹ்வின் பெயரில் உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர். இது அரசியல் சட்டப்படி செல்லாது என அறிவிக்க வேண்டும்' என்று அவர் கோரியிருந்தார்.


அப்போது, நீதிபதிகள் கூறுகையில், "அரபி மொழியில் அல்லா என்றால் கடவுள் என அர்த்தம். படிப்பறிவு இல்லாத மற்றும் ஆங்கில மொழி தெரியாதவர்களுக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட பதவி பிரமாணத்தின் நகல்கள் வழங்கப்பட்டு அவர்கள் படிக்கின்றனர். இதை அரசியல் சட்டத்தை மீறியதாக எப்படி கூறலாம்? எனவே, அல்லாவின் பெயரில் பதவி பிரமாணம் எடுப்பதில் தவறு இல்லை,'' என்று தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.