இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

May 31, 2008

குறைகள் நிவர்த்தி: தமுமுக நன்றி

தமிழ்நாடு முஸலி்ம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று 1995ஆம் ஆண்டு முதல் பல போராட்டங்கள், மாநாடுகள் மூலம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோரி வந்தது. இந்நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தவாறு தமிழக அரசு 15.9.2007 அன்று பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தலா 3.5 சதவீத இடஒதுக்கீடு அளித்து உத்தரவிட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டில் அதிகாரிகளின் குளறுபடிகள் காரணமாக 3.5 சதவீத ஒதுக்கீடு முழுமையாக பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு கிடைக்காத நிலையை அருந்ததியர் இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக முதல்வர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் அதற்கு முன்பாக தமிழக முதல்வரை நேரிலும் சந்தித்து எடுத்துரைத்ததைத் தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகள் களையப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்து இன்று அதற்கான அரசாணை வெளியிட்டமைக்கு தமிழக முஸ்லிம்கள் சார்பிலும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

(செ. ஹைதர் அலி)
பொதுச்செயலாளர்
தமுமுக

ராணுவத்தில் சேர ஊக்கப்படுத்துங்கள்..!

ராணுவத்தில் சேர ஊக்கப்படுத்தும்வகையில் 16 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ஒரு மைல் தூரத்தை "ஆறு நிமிடம் ஓடுதல்' ஓட்டப்போட்டி திருச்சியில் நடத்தப்படுகிறது. "ஒரு மைல் தூரத்தை சராசரி ஆறு நிமிடத்தில் கடக்க வேண்டும்' என்பது ராணுவத்தில் தேர்வு செய்யும் விதிமுறையாகும். ராணுவத்தில் சேர ஊக்கப்படுத்தும் வகையில் 16 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு, "ஆறு நிமிடம் ஓடுதல்' என்ற பெயரில் ஒரு மைல் தூரத்துக்கான ஓட்டப் போட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருச்சியில் நடத்துகிறது.

ஒரு மைல் தூரத்தை ஆறு நிமிடத்தில் கடக்கும் நபர்களை ஊக்கப்படுத்தி ராணுவத்தில் சேர அறிவுறுத்தப்படுகிறது. மற்றவர்கள் தினமும் முறையான பயிற்சி செய்தால், ஒரு மைல் தூரத்தை ஆறு நிமிடத்தில் முடித்தால் ராணுவத்தில் சேரலாம் என்பது இப்போட்டின் நோக்கமாகும். ஒரு மைல் தூர ஓட்டப்போட்டி ஜூன் மூன்றாம் தேதி மாலை நான்கு மணிக்கு அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. தகுதி வாய்ந்த ஆண்கள் போட்டியில் பங்கேற்கலாம். விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர், அண்ணாவிளையாட்டு அரங்கம் திருச்சி, தொலைபேசி எண் 2420685 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தேர்வுகள் ஞாபகம் இருக்கிறதா...?

இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் பி.ஓ. தேர்வு - ஜூன் 1
யு.பி.எஸ்.சி. இன்ஜினியரிங் சர்வீசஸ் தேர்வு - ஜூன் 7
எஸ்.எஸ்.சி. புள்ளியியல் ஆய்வாளர் மற்றும் கம்பைலர் பணித்தேர்வு - ஜூன் 15
யு.பி.எஸ்.சி. வனச் சேவைத் தேர்வு - ஜூலை 12
எஸ்.எஸ்.சி. கம்பைண்ட் கிராஜூவேட் லெவல் தேர்வு - ஜூலை 27
யு.பி.எஸ்.சி. என்.டி.எ. மற்றும் நேவல் அகாடமி தேர்வு(2) -ஆகஸ்ட் 17

May 29, 2008

மானங்கெட்ட மாப்பிள்ளைகளே..!

""திருச்சி கோட்டை கடைவீதியில் அனைத்து பொருட்களும் விற்கப்படும் பிரபல கடையில் நேற்று ஒரு இளம்பெண் ஒரு கிரெடிட் கார்டை கொடுத்து நகை வாங்கினார். கிரெடிட் கார்டை வாங்கி பரிசோதித்த கடை ஊழியர்கள் அதில் பணம் இல்லாததை கண்டுப்பிடித்தனர். அந்த பெண்ணிடம் விசாரித்த போது அது திருட்டு கிரெடிட் கார்டு என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்த பெண் கோட்டை போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

விசாரணையில் அந்த பெண் பெயர் காயத்ரி ரம்யா (வயது 19). புள்ளம்பாடியை சேர்ந்த ராஜா என்பவரது மகள் என்று தெரிய வந்தது. குடும்பம் வறுமையில் வாடியதால் சிறுவயதிலேயே காயத்ரி வீட்டு வேலைக்கு சென்று விட்டார். சென்னையில் வேலைபார்த்து உள்ளார்.

இந்த நிலையில் 19 வயதான காயத்ரி தனது திருமணத்திற்கு மாப்பிள்ளைக்கு சீர்வரிசை கொடுக்க வேண்டியது இருக்குமே என்று யோசித்தார். இதனால் கிரெடிட் கார்டை திருடி கோட்டை கடைவீதியில் உள்ள பிரபல கடையில் கட்டில், டி.வி, பீரோ, பிரிட்ஜ் ஆகியவற்றை கடந்த சில நாட்களுக்கு முன்பு வாங்கி உள்ளார்.

இதற்கிடையில் கிரெடிட் கார்டு காணாமல் போனதும் அதன் உரிமையாளர் வங்கியில் கூறி அந்த கிரெடிட் கார்டு கணக்கை முடிக்கி வைத்துள்ளார். இதை அறியாத காயத்ரி நேற்று மீண்டும் அதே கடைக்கு நகை வாங்குவதற்கு வந்தார். அப்போது தான் போலீசில் பிடிபட்டுள்ளார்.

அவரிடம் இருந்து டி.வி உள்பட அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மகளின் நிலையை பார்த்து அவரது பெற்றோர் கண் கலங்கியது பார்ப்போரை நெகிழவைத்தது.""இது செய்தி. வர்ணபேதங்களை வகுத்தவர்கள். ராமர்பாலத்தை தேசிய சின்னமாக ஆக்கவேண்டும் என்றவர்கள் இந்தக் கொடுமைக்கெல்லாம் வாயை பொத்தி்க்கொள்வார்களே..!

அல்லாஹ்வோ தனது அருள்மறையில்:
"...பெண்களை தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல் அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்." (அல்குர்ஆன் - 4:24)

பத்தாம் வகுப்பு ரிசல்ட் - முக்கிய செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..,
இந்தச்செய்தி குவைத்திலிருப்பவர்களுக்கு மட்டும்:
தாயகத்தி்ல் பத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியாவதை முன்னிட்டு குவைத்தில் இருப்பவர்கள் தங்களது குடும்பத்தில் தேர்வு எழுதியுள்ளவர்களின் மதிப்பெண் விவரங்களை அறிய 7493869 என்ற மொபைல் எண்ணிற்கு தேர்வு எண்ணை மட்டும் மெஸேஜ் செய்தால் உடனடியாக மதிப்பெண் பட்டியல் உங்கள் மொபைலுக்கு மெஸேஜ் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
தமுமக - குவைத்

குவைத் தமுமுக வீடியோக்கள்

தமுமுக குவைத் மண்டலம் நடத்தும் நிகழ்ச்சிகளின் விழி(வீடியோ)ப் பதிவுகளை கீழ்கண்ட தொடுப்பில் காணலாம்


விமர்சனங்களையும் பதியலாம்..!

May 27, 2008

ரேண்டம் நம்பர் என்றால் என்ன?

என்ஜினியரிங், மருத்துவம் விண்ணப்பித்தவருக்கு, 'ரேண்டம் நம்பர்' என்று ஒரு எண் ஒதுக்கப்படுகிறது.
கம்ப்யூட்டர் மூலம் உத்தேசமாக ஒதுக்கப்படும் அந்த எண், 6 அல்லது 7 இலக்கம் கொண்டவையாகும். ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு கட்-ஆப் மார்க் சமமாக வரும் பட்சத்தில் முதலில், மாணவர்களின் கணித மதிப்பெண்களின் கணித மதிப்பெண் (மருத்துவ படிப்பாக இருந்தால் உயிரியல்) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதுவும் சமமாக இருந்தால் இயற்பியல் மதிப்பெண்ணும், ஒருவேளை அதுவும் சமமாக இருந்தால் வேதியியல் மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். பெரும்பாலும் இந்த நிலையிலேயே முடிவு தெரிந்துவிடும்.
ஒருவேளை, வேதியியல் மதிப்பெண்ணும் சமமாக இருந்துவிட்டால், மாணவர்களின் பிறந்த தேதியை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். வயதில் மூத்தவருக்கு அதுவும், சமமாக இருந்து விட்டால் கடைசியாக முன்பு ஒதுக்கபட்ட ரேண்டம் நம்பரை பார்ப்பார்கள். யாருடைய நம்பர் குறைந்த மதிப்பில் உள்ளதோ (உதாரணத்துக்கு 1,00000, 2,00000 என்று இருந்தால் அதில் 1,000000 எண் உள்ள மாணவருக்கு சீட் அளிக்கப்படும்) இதுவே ரேண்டம் எண் எனப்படுகிறது.
நன்றி: தமுமுக இணையதளம்

May 26, 2008

தினகரனின் செய்தி

சத்திரமனை சம்பவம் தொடர்பாக தினகரனில் வந்துள்ள செய்தி:
மத்திய மந்திரி ராஜாவைப்பற்றியோ அவரது அண்ணனை பற்றியோ குறிப்பிடவில்லை

May 25, 2008

சங்பரிவார சதியில் சத்திரமனை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
மாநில செயலாளர் சகோ.ஹைதர்அலி அவர்களுக்கு தமுமுக - குவைத் மண்டலத்திலிருந்து எழுதுவது பெரம்பலூர் மாவட்டத்திற்கு அருகிலுள்ளது சத்திரமனை என்ற சிற்றூர். மக்கள்தொகையில் பகுதிக்கு மேல் இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கென்று ஒரே ஒரு பள்ளிவாயில் உள்ளது. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பாக ஒரு சுப்ஹ் நேர தொழுகை முடிந்து மக்கள் வெளிவ ரும் போது இந்துக்கள் அனைவரும் பள்ளிவாயிலை சுற்றி முற்றுகையிட்டுள்ளனர். என்னஏதென்று ஜமாஅத்தார்கள் விசாரிக்கும் போது (இது கொசுறுச்செய்தி:பள்ளியின் பின்புறத்தில் இடப்பக்கமாக இந்துக்கள் வழிபட கோவில் ஒன்று இருக்கின்றார்கள். அக்கோயிலுக்கு செல்லும் வழியாக பள்ளிவாயிலின் இடப்பக்கசுற்றுச்சுவருக்கும் அருகிலுள்ள விவசாய நிலத்திற்கும் இடையிலுள்ள 25அடி பாதையை தான் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்துள்ளார்கள். எந்தப்பிரச்சனையும் இல்லை.) ஆனால், தற்போது அந்தப்பாதை போதவில்லை அதனால் பள்ளிவாயிலின் சுற்றுச்சுவரை ஒரு 10அடி உள்பக்கம் தள்ளிவைத்து கொண்டால் வசதியாக இருக்கும் என முற்றுகையிட்ட இந்துக்கள் கூறியுள்ளார்கள். அதற்கு ஜமாஅத்தார்கள் மறுக்கவே சுற்றுச்சுவரை இடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பிறகு ஆர்.டி.ஓ. மற்றும் ஆர்.ஐ க்கு கம்ப்ளைண்ட் கொடுத்து அவர்கள் வந்து அளந்து பார்க்கையில் பொதுப்பாதையாக இன்றுவரை பயன்படுத்தி வந்த அந்த இடமும் பள்ளிக்குத்தான் சொந்தம். ஆதாரப்படி கோவிலுக்கென்று ஆரம்பகாலத்திலிருந்தே தனியாக ஒரு பாதையே இருக்கின்றது. வீண்வம்பு செய்யாதீர்கள் என சமரசம் செய்துவிட்டு அதிகாரிகள் சென்று விட்டார்கள். இந்த பிரச்சனைக்கு பின்னால் மத்திய மந்திரி அ. ராசாவும் அவரது அண்ணனும் இந்துக்களை துண்டிவிட்டு கொண்டுள்ளனர். நிலைமை இவ்வாறு இருக்க 23-5-2008 அன்றிலிருந்து திருவிழா செய்வதற்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதை அறிந்த விடுமுறையில் சென்றிருந்த தமுமுக சகோதரர்கள் மறுநாள் சனிக்கிழமை சாமி ஊர்வலமாக சென்று கோவிலுக்குள் வைக்க வேண்டும் என்று இந்துக்கள் திட்டமிட்டிருப்பதை அறிந்து காவல்துறை மற்றும் பத்திரிக்கை நண்பர்களுக்கு தகவல் தந்து அவர்களை அதிகாலையிலேயே வரவழைத்திருந்தார்கள். திட்டப்படி அனைவரும் வந்து சேர இந்துக்களோ சாமி சிலையை எடுத்துக்கொண்டு பள்ளிவாசல் இடத்தின் வழியாக செல்ல முற்படுகையில் முஸ்லிம்கள் தடுத்திருக்கின்றனர். பிரச்சனை ஆகவும் காவல் துறை அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்து விட்டு கோவிலுக்கு செல்வதற்கான உரிய வழியை பயன்படுத்துங்கள் இந்த வழி இஸ்லாமியர்களுடையது என தடுத்து அந்த பாதையிலேயே காவல்ர்கள் தடுத்து பாதுகாத்திருக்கிறார்கள். ஆனால்,
இந்துக்களோ காவல்கள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தியுள்ளார்கள். பிறகு கூட்டத்தை கலைக்க காவலர்களும் லத்திசார்ஜ் செய்துள்ளார்கள். பிறகு சாமிசிலையை பாதியிலேயே இறக்கிவிட்டு இந்துக்கள் மத்திய மந்திரி ராஜாவுக்கு போன் செய்து விசயத்தை சொல்லவும் அவரோ மாவட்ட கலெக்டர் அனில் மேஷராம் அவர்களுக்கு சொல்லி கலெக்டரே வந்துவிட்டார். பிறகு கலெக்டர் வந்த பிறகு காவல்துறை உண்மையை எடுத்து சொன்னபோது கலெக்டர் மீண்டும் ராஜாவை தொடர்பு கொண்டுவிட்டு அவரது தலைமையிலேயே தடையை மீறி பள்ளிவாசலின் பாதையிலேயே ஊர்வலத்தை நடத்தி சாமி சிலையை கோவிலுக்கு வைத்து விட்டு இஸ்லாமியர்களிடம் வந்து இடிக்கப்பட்ட சுற்றுச்சுவரை அரசு செலவிலேயே கட்டித்தருகிறோம். ஏதாவது பிரச்னை பண்ணீங்க எல்லாத்தையும் தூக்கி உள்ள வச்சிருவேன் என்பது போல மிரட்டிவிட்டு 144 தடைஉத்தரவை அமல் படுத்தி சென்று விட்டார். காவல்துறையினரிடம் ஏன் உண்மை சொல்லி தடுக்கவில்லை என்று மக்கள் கேட்ட போது நாங்கள் என்ன செய்யமுடியும் கலெக்டரே முன்னின்று இதை செய்வாரு என்று யாருக்கு தெரியும் என்று கையை விரித்து விட்டார்கள். வழக்கம் போல் ஒவ்வொரு சனிக்கிழமையும் ராஜா பெரம்பலூருக்கு வருவது வழக்கும். அவ்வாறு நேற்றும் வந்திருந்த போது சத்திரமனையிலுள்ள திமுக ஒன்றிய பொருப்பிலுள்ள இஸ்லாமிய சகோதரர்கள் சென்று சந்தித்த போது அவர்களுக்கு அவ்வளவு தைரியம் வந்துவிட்டதா நான் பாத்துகிறேன் என்று சொல்லி அனுப்பி விட்டாராம். இதற்கிடையில் பா.ஜ.கவிலிருந்து 20 பேர் பெரம்பலூரிலிருந்து வந்து இந்துக்களுக்கு தைரியம் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள். இஸ்லாமியர்களைப்பார்த்து தகாத வார்த்தைகளிலில் ஏசிவிட்டும் சென்றார்கள். இப்படியாக இருக்கிறது நிலைமை.
நான் ரிபாய் அவர்களுக்கும் போன் செய்து சொல்லியிருந்தேன். தாங்கள் உடனடியாக நல்ல முடிவை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
வஸ்ஸலாம்
தமுமுக - குவைத்

May 24, 2008

குவைத்தில் பொதுக்கழுக்கூட்டம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...,
தமுமுக குவைத் மண்டலத்தில் கடந்த 23-5-2008 அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் குவைத் - மிர்காப் (சிட்டி) பகுதியில் அமைந்துள்ள ரவுண்டானா பள்ளிவாசலில் 2007-2008க்கான ஆண்டறிக்கை சமர்ப்பித்தலும், கலந்தாய்வுக்கூட்டமும் நடைபெற்றது. மண்டலத் தலைவர் அமானுல்லாஹ்-திருச்சி அவர்களின் தலைமையில் நடந்த இக்கூட்டத்தை துணைத்தலைவர் அப்துல் கரீம் பாபு முஹம்மதுபந்தர்(தஞ்சை) அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். அல்கிரைன் கிளை பொருளாளர் ஜாபர்கான்-கீவளுர் வரவேற்றார். தலைமையுரைக்குப்பின் மண்டலப்பொருளாளர் ஃபஜ்லுர்ரஹ்மான்-(கிராப்பட்டி)திருச்சி அவர்கள் ஆண்டறிக்கையை வாசித்து வரவு-செலவு கணக்குகளை உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பித்தார். இக்கூட்டத்தில் ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புக்கும், அப்பாவி இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதற்கும் கண்டனம் தெரிவித்து கால்திய்யா கிளைச்செயலாளர் ஜாபர்ஸாதிக்-திருவாடானை அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் இஷா தொழுகைக்குப்பின் நிறைவடைந்தது. இனி வரும் வாரங்களில் இன்ஷா அல்லாஹ் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் இதே ரவுண்டானா பள்ளிவாயிலி்ல் தமுமுகவிற்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் மஃரிப் முதல் இஷா வரை தமுமுக நிர்வாகிகளை சந்திக்கலாம் வேண்டிய தகவல்களை பெற்றச் செல்லலாம் என்றும் அறிவுருத்தப்பட்டது.