இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் தமுமுக குவைத் மண்டலத்தின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..,
தமிழகத்தில் எதிர்வரும் 2011 சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்துக்கட்சிகளும் தயாராகி வரும் தருணத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மிகுந்த உற்சாகத்தோடு தமுமுக மற்றும் மமகவின் நிர்வாக தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. முறையாக அமைக்கப்பட்ட தேர்தல் ஆணையம் மூலம் நடைபெற்று வரும் தேர்தல்; தமிழகத்தில் இருக்கும் பிற அரசியல் கட்சிகளுக்கும், இந்தியா முழுதும் இருக்கும் முஸ்லிம் அமைப்புகளுக்கும் ஒரு முன் மாதிரி என்றால் அது மிகையல்ல. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்தேர்தல்கள் மூலம் கிளை அமைப்புகள் புனரமைக்கப்பட்டு, மழையில் நனைந்த தாவரங்களைப் போன்ற புத்துணர்வுடன் தொண்டர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்கிறார்கள்.
அதையொட்டிய நிகழ்வாக தமுமுகவின் குவைத் மண்டலத்திலும் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் பொருட்டு குவைத்தின் முக்கிய பகுதிகளில் தேர்தல் விழிப்புணர்வு கருத்தரங்குகளும், மார்க்க பிரச்சாரங்களும், சமூக விழிப்புணர்வு சொற்பொழிவுகளும் நடைபெற இருக்கிறது இன்ஷாஅல்லாஹ். அந்தந்த வார நிகழ்ச்சிகளை அந்தந்த கிளை நிர்வாகிகளிடமும், வெளியிடப்படும் பிரசுரங்களிலும், வலைப்பதிவிலும் அறிந்து கொள்ளலாம். சமூக எழுச்சிக்காகவும், மறுமை வெற்றிக்காகவும் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அனைவரும் தவறாது கலந்து கொண்டு விழிப்புணர்வு பெறும்படியும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், குவைத்தில் கிளைகள் இல்லாத பகுதிகளிலும், கேம்ப்களிலும், மாவட்ட, ஜமாஅத் வாரியாகவும் தமுமுகவுடன் தங்களை இணைத்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும். மேலும், தமுமுக தாயகத்தில் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளின் வீடியோ தொகுப்புகளும், மக்கள் உரிமை வாரஇதழும் தேவைப்படுவோரும் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி எண்கள்:
97493869 - 99851036 - 97428835 - 99369743 - 99178911
மின்னஞ்சல்:
tmmkkwt@gmail.com
வலைப்பதிவு:
www.q8tmmk.blogspot.com