இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

July 25, 2009

குவைத்தில் புதிய வேலைவாய்ப்புகள்

Below are this week's Hot Jobs opportunities where you can apply easily with the click of a button.
New Jobs for this Week
Q8 Media / Secretary/Receptionist [ details ]
Arab Open University / محلل مالي و مراقب موازنات [ details ] رئيس حسابات [ details ]
Al Mulla & Behbehani Motors Company / Assistant Spare Parts Manager [ details ]
Kuwait Investment Company /مساعد مدير بإدارة الأصول [ details ]
Kuwait Public Transport Company - KPTC
عامل نظافة [ details ]
مساعد ملاحظ [ details ]
ساعي – تقديم خدمات أعمال المناولة و البوفيه. [ details ]
ملاحظ [ details ]
سائق [ details ]
منجد [ details ]
فني تبريد [ details ]
حداد [ details ]
ميكانيكي [ details ]
فني إطارات [ details ]
سمكري [ details ]
سائق مهمات [ details ]
MultiTrend
منفذ تسويق [ details ]
مدير معرض [ details ]
مشرف مبيعات [ details ]
مساعد مبيعات [ details ]
Accountant [ details ]
Secretary [ details ]
Translator [ details ]
CCTV Engineer [ details ]
Creative Graphic Designer [ details ]
مدير تنفيذي [ details ]
نائب مدير مشروع [ details ]
مهندس تسعير [ details ]
مهندس معماري [ details ]
حاسب كميات [ details ]
مدير توظيف [ details ]
مدير حسابات [ details ]
محاسب مدير أول [ details ]
مدرسين الكمبيوتر [ details ]
مدرسين السكرتارية [ details ]
مدرسين اللغة الإنحليزية [ details ]
مدرسين المحاسبة [ details ]
مدرسين إدارة الأعمال [ details ]
موظفات تسويق عبرالهاتف [ details ]
موظفات اتصال [ details ]

July 16, 2009

பொக்கிஷம் என்ற பெயரில் இன்னொரு கலவர திரைப்படம்!

-இனியவன்
இயக்குனர் சேரன் இயக்கி நடிக்கும் பொக்கிஷம் என்ற திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது.சினிமா பைத்தியங்கள் நிறைந்த தமிழகத்திற்கு புதிய திரைப்படங்கள் வெளிவருவது ஒன்றும் புதிது அல்லவே என்று நீங்கள் கேட்கலாம்.திரைப்படம்,கலை என்ற பெயரில் வியாபார வெறி பிடித்து சினிமாகாரர்கள் செய்யும் சமூக சீரழிவுகளை வன்மையாக கண்டிப்பவர்கள் நாம்.சினிமா என்னும் சீரழிவு கலாச்சாரத்தில் இருந்து தமிழ் முஸ்லிம் சமுதாயம் பெரும்பாலும் ஒதுங்கியே இருந்து வருகிறது.ஒரு சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் சினிமா தளத்தில் இயங்கி வருகிறார்கள்.ஒரு சில மார்க்கம் தெரிந்த முஸ்லிம்கள் இருந்தாலும் அவர்களால் மார்க்க விசயங்களை முஸ்லிம் சமூக அவலங்களை வெகு ஜன ஊடகமான சினிமாவில் பூடகமாக கூட தெரிவிக்க முடிவதில்லை.தெரிவிக்கவும் முயலுவதில்லை.
சினிமா என்ற ஊடகத்தின் மூலம் புரட்சிகளை ஏற்படுத்திய பல திரைப்படங்கள்(உமர் முக்தார்) மனித வாழ்வின் அவலங்களை,அழகியல்களை காட்டும் அற்புதமான திரைப்படங்கள்(ஈரானிய திரைப்படங்கள்)எடுக்கப்பட்டுள்ளன.எடுக்கப்பட்டு வருகின்றன.கடந்த கால நிகழ்வுகள்,மக்கள் தலைவர்களின் வரலாறுகள் என திரைப்படங்கள் பல பரிணாமங்களை கொண்டவை, மக்களின் எண்ணங்களை எழுச்சி பெற வைக்கவும்,நல்லவை பக்கம் நாட்டம் பெற வைக்கவும் சுய உணர்ச்சி கொள்ள வைக்கவும் திரைப்படங்கள் பெரும் பங்காற்றுகின்றன.ஆனால் பொழுது போக்கு என்ற பெயரில் சமூக பொறுப்புகளை மறந்து வியாபார வெற்றி,பணம் என்ற குறிக்கோளுடன் மட்டுமே களமிறங்கி உள்ள நமது இந்திய குறிப்பாக தமிழ் திரைப்பட வியாபாரிகள் பெண்களின் அந்தரங்க அவயங்களை காட்டுவதிலும் காதல் என்ற பெயரில் சுய ஆசைகளை கற்பனைகளை திரைப்படங்களாக எடுப்பதில் மட்டும்தான் கவனம் செலுத்தி வருகின்றனர்.தமிழ் சினிமா தொடங்கியதில் இருந்து இன்று வரை காதல் என்ற ஒற்றை சொல்லை வைத்து வித்தை காட்டுவதில் சினிமாக்காரர்கள் வல்லவர்கள்.
அந்த வகையில் காதல் கதை என்ற பெயரில் சர்ச்சைக்குரிய அல்லது சர்ச்சை ஆகும் என்றே தெரிந்து எடுக்கப்பட்ட படம்தான் சேரனின் பொக்கிஷம். படத்தின் கதை இதுதான்.நாகூரை சேர்ந்த முஸ்லிம் பெண்ணான இலக்கியம் படிக்கும் நதிராவி ற்க்கும் (நடிகை பத்மப்ரியா) கப்பல் பொறியாளரான இந்து இளைஞர் சேரனுக்கும்(கதைப் பெயர் தெரியவில்லை) நடக்கும் காதல் அதை ஒட்டிய சம்பவங்கள்தான் கதை. இதில் இருவரும் கடிதம் மூலமாகவே தங்கள் காதலை பரிமாறிக் கொள்கிறார்களாம். 1970 ம் ஆண்டு கால கட்டத்தில் கதை நடப்பதாக செட்டிங் போடப்பட்டு படம் எடுக்கப் பட்டுள்ளதாம்.
மணிரத்தனம் என்ற இருட்டுப்பட இயக்குனர் பம்பாய் என்று இதேபோல்தான் முஸ்லிம் பெண் இந்து இளைனன் என்ற கான்செப்டில் ஒரு கதை எடுத்தார்.படத்தில் முஸ்லிம் பெண் கடல்புறத்தில் குலுங்க குலுங்க ஓடி வரும் காட்சியை ரசிகர்களுக்கு விருந்தாக்கினார்.பால் தாக்கரேவுக்கு மட்டும் படத்தை போட்டு காண்பித்து அனுமதி வாங்கி வெளியிட்டார்.முஸ்லிம் சமூக பெரியவர்களுக்கோ,இயக்கங்களுக்கோ படத்தை காட்டவில்லை.ஏன் காட்ட வேண்டும் என்ற பாசிச சிந்தனைதான் அவரை அவ்வாறு செய்ய வைத்தது. விளைவு உணர்ச்சி வசப்பட்ட உணர்வுள்ள முஸ்லிம் இளைஞர்கள் வெடி குண்டுகளை மணி ரத்தினத்தின் வீட்டில் வீசினர்.நல்ல வேளையாக தப்பி பிழைத்தார் இருட்டு இயக்குனர்.இந்த வழக்கில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.சிலர் சிறையில் வாடி வருகின்றனர்.மணி ரத்தினத்தின் கதை தெரிந்தும் சினிமாவை புறம் தள்ளியே வைத்திருக்கும் தமிழ் முஸ்லிம்களின் குணம் தெரிந்தும் தொடர்ந்து சில தமிழ் பட வியாபாரிகள் நம்மை தொந்தரவு செய்தே வருகின்றனர்.முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பது,முஸ்லிம் பெண்களின் பர்தாவை பயன்படுத்தி கேவலமான செயல்களை செய்வது என பல படங்களை எடுத்து வருகின்றனர். (உதாரணம். ஒற்றன்,ஹே ராம்,இன்னும் பல).
ஏற்க்கனவே தமிழ் திரைப்படங்களின் உபயத்தால் காதல் என்ற பெயரிலும் நட்பு என்ற பெயரிலும் இளம் பெண்களும் இளைஞர்களும் வீட்டை விட்டு ஓடுதல், ரகசிய திருமணம் செய்தல், கடற்கரைகளில், பூங்காக்களில் சேட்டைகள், விடுதிகளில் லீலைகள் என தமிழ் கலாசாரத்தை வளர்த்து வருகின்றனர். இந்த படங்களின் பாதிப்புக்கள் கலாச்சார பெருமை கொண்ட தமிழக முஸ்லிம் சமூகத்தையும் மெல்ல பாதித்து வருகின்றது.ஓடிப்போகும் கலாச்சாரம் தற்ப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.இந்நிலையில் இது போன்ற படங்கள் சமூகத்தில் எவ்வித தாக்கங்களை ஏற்படுத்தும் என்று சொல்லி தெரிய தேவை இல்லை. முஸ்லிம் சமூகத்து பெண்கள் மற்றும் இளைஞர்களை இது போன்ற பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க வேண்டியது முஸ்லிம் சமூக அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடமை.எனவே பொக்கிஷம் போன்ற படங்கள் வெளி வரும் முன்னே திரைபடத்தை பார்த்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கோர வேண்டும். மறுத்தால் திரைப்படம் வெளிவருவதற்கு கடுமையான எதிர்ப்புகளை காண்பிக்க வேண்டும்.பம்பாய் பட பாதிப்பினால் ஏற்பட்ட விளைவுகள் இந்த படத்தினாலும் ஏற்பட்டு விடக்கூடாது.
தமிழக அரசும் இவ்விஷயத்தில் உடனே கவனம் செலுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னர் சட்டம் ஒழுங்கு கெட்ட பின்னர் வருந்துவதை விட முன் நடவடிக்கை எடுப்பதே சாலச் சிறந்தது.