இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!
Showing posts with label Attempt Improvement தோல்வி உடனடி தேர்வு விண்ணப்பங்கள் தமுமுக குவைத். Show all posts
Showing posts with label Attempt Improvement தோல்வி உடனடி தேர்வு விண்ணப்பங்கள் தமுமுக குவைத். Show all posts

May 17, 2008

+2 உடனடி தேர்வு விண்ணப்பங்கள்

பிளஸ் 2 தேர்வில் ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை தோல்வியடைந்த மாணவர்கள் ஏராளமானோர், உடனடித் தேர்வு எழுத நேற்று விண்ணப்பம் செய்தனர். பிளஸ் 2 தேர்வு முடிவில், 91 ஆயிரத்து 498 மாணவர்கள் தோல்வி அடைந்தனர். இவர்களில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை தோல்வி அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. உடனடித் தேர்வுக்கு நேற்று முதல் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுத் துறை இயக்குனர் வளாகத்தில் ஏராளமான மாணவர்கள் நேற்று விண்ணப்பம் செய்தனர்.

எனவே, அன்பிற்குரிய தோழர்களே தங்கள் உறவினர்கள் நண்பர்களில் யாரேனும் +2 தேர்வில் தோல்வி அல்லது குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் (Improvement) மீண்டும் தேர்வெழுதி வெற்றியடைய வேண்டுகின்றோம். இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் விரைந்து செயல்படவேண்டியது அவசியம்.