இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

January 23, 2008

ஓர் அவசர செய்தி...!

ஜமாஅத் தலைவர்கள் , நிர்வாகிகள் , ஆலிம்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் ஓர் அவசர செய்தி!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம ...

தமிழகத்தில் வாழும் இஸ்லாமியர்களுக்கு பல்வேறு போராட்டங்களுக்கு பின் தமிழக அரசின் 3.5 சதவீத இடஒதுக்கீடு கிடைத்து நடைமுறைக்கு வந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ் ...!
பாடுபட்டு கிடைத்த இடஒதுக்கீட்டின் பலன்களை நமது சமுதாயம் அனுபவிப்பதற்குண்டான நடைமுறை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதையும் இங்கு சுட்டிகாட்ட விரும்புகின்றோம்.

கடந்த கல்வியாண்டில் அதாவது 2007 ம் வருடம் பொறியியல் (Engineering ) கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் நமது முஸ்லிம் சமுதாய மாணவ , மாணவியர் 2.1 விழுக்காடு மட்டுமே சேர்ந்துள்ளனர். இது 3.5 சதவீத இடஒதுக்கீடு கிடைப்பதற்கு முன்பாக இருந்த நிலை .

ஆனால், இவ்வருடம் முதல் 3.5 சதவீத இடஒதுக்கீடு கிடைத்த நிலையில் குறைந்த கட்டணத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் நமது சமுதாய மாணவ , மாணவியர் சேர்ந்து பொறியியல் கல்வி கற்பதற்குண்டான பிரகாசமான சூழல் ஏற்பட்டுள்ளது .

இந்நிலையில் இவ்வருடமும் அதாவது 2008ம் ஆண்டிலும் கடந்த 2007 ம் ஆண்டைப் போன்றே 2.1 விழுக்காடு மாணவ, மாணவியர் மட்டும் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தால் ... ஏறத்தாழ ஆயிரம் (1000) பொறியியல் இடங்களை அதாவது இவ்வருடம் மட்டும் நமது சமுதாயத்தை சேர்ந்த ஆயிரம் பொறியாளர்களை இழக்கும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுவிடும். இதனால் கிடைத்த இடஒதுக்கீட்டின் பயனை / பலனை நமது சமுதாயம் அடைய முடியாது என்பதை நாம் கவலையுடன் கவனிக்கின்றோம்.

பொறியியல் கல்வியில் மட்டுமே நமது சமுதாயத்திற்கு இவ்வளவு இழப்பு என்றால் மருத்துவம் , கலை ( Arts), தகவல் தொழிற்நுட்பம் (I.T ), தொழிற்கல்வி உள்ளிட்ட ஏராளமான பட்ட (Degree ) / பட்டயப் (Diploma ) படிப்புகளில் நாம் இழந்துவிட்ட / இழக்கப்போகின்ற எண்ணிக்கைகளை கணக்கெடுத்தால் நமது சமுதாயத்தின் அவல நிலைகள் நம்மை நிச்சயம் சிந்திக்க வைப்பது மட்டுமில்லாமல் நிகழ்காலத்திலோ / வருங்காலத்திலோ நமது சமுதாய முன்னேற்றத்திற்கான ஆக்கப்பூர்வமான முயற்சிகள் எடுப்பதற்கு வழிவகுக்கும். இன்ஷா அல்லாஹ் ...!

நம்மில் சிலர் ஜமாஅத் தலைவராக அல்லது நிர்வாகியாக அல்லது ஆலிமாக அல்லது கல்வியாளராக ...ஏன் பெற்றோராகவாவது இருப்போம். அப்படியானால் நாம் செய்ய வேண்டியது என்ன?

இவ்வருடம் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவியர் தேர்வெழுத இன்னும் சில வாரங்களே உள்ளன. எனவே , நமது சமுதாயத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவ , மாணவியருக்கு ஒவ்வொரு பள்ளிவாசலிலும் அல்லது மதரஸாவிலும் அல்லது மதரஸா உள்ளிட்ட பள்ளிவாசல் வளாகத்திலும் தனித்தனியாக இலவச பயிற்சி மையம் (Tuition Center) அமைக்க ஒவ்வொரு ஜமாஅத்தார்களும் ஏற்பாடு செய்ய வேண்டும் .

பள்ளிவாசல் மற்றும் அதனுடன் சம்பந்தப்படும் இடங்களில் ஏற்பாடு செய்வதால் பிற சமூக மக்கள் தவறாக நினைக்கவும் வாய்ப்பில்லை. மாணவர்களும் தொழுகையை பேணுபவர்களாக ஆவார்கள். மாணவிகள் பர்தா அணிந்து வர வாய்ப்பும் ஏற்படும். மாதம் இருமுறை ஆலிம்கள் மற்றும் ஆலிமாக்களை கொண்டு மார்க்கக் கல்வியும் கொடுக்கலாம்.

இது போன்ற இலவச பயிற்சி மையங்கள் (Tuition Center ) கடந்த 4 மாதங்களாக இராமநாதபுரம் மாவட்டம் முழவதும், மதுரை , தேனி, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன .

எனவே, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் , சிற்றூர்களிலும் , பேரூர்களிலும் அந்தந்த பகுதி புரவலர்கள் உதவியுடன் ஜமாஅத்தார்கள் இலவச பயிற்சி மையங்களை (Tuition Center) தொடங்கி நமது சமுதாய மாணவ, மாணவியரின் கல்வி முன்னேற்றத்தில் பங்கேற்க வேண்டும்.

இது குறித்து மேலதிக விபரங்களை அறிந்த கொள்ள
இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச் செயலாளர் எஸ் . எம். ஹிதாயத்துல்லாஹ் ( அலைபேசி எண்: 9840040067) அவர்களையும் , தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் இலவச பயிற்சி மையங்கள் குறித்த தகவல்களை பெற


இராமநாதபுரம்
மவ்லவி பஷீர் சேட் 94436 10495
அல்ஹாஜ் ராஜா ஹஸன் 94432 26374

மதுரை மாவட்டம்
அல்ஹாஜ் ஜவஹர் அலி 97893 66135
அல்ஹாஜ் மவ்லவி ஏ. பீர் முஹம்மது பாகவீ 94439 79187

சிவகங்கை மாவட்டம்
முஸஃப்பர் அப்துர் ரஹ்மான் 94439 19984
பேராசிரியர் ஆபிதீன் 94436 10350
திண்டுக்கல் மாவட்டம்
அல்ஹாஜ் முஹம்மது அலி 94437 40098
ஷே க் தாவூத் 98423 82053

தேனி மாவட்டம்
பேராசிரியர் அப்துஸ் ஸமது 93642 66001
கம்பம்
முஹம்மது அலி 99652 31110

'பார்த்திபனூர் மர்ஹூம் அல்ஹாஜ் முஹம்மது முஸ்தஃபா அறக்கட்டளை ' சார்பாக ' சிந்தனைச் சரம்' மாத இதழில் (ஜனவரி 2008, துல்ஹஜ் 1428) வெளியிடப்பட்ட இந்த அவசர செய்தி நமது சமுதாய நலன் கருதி வெளியிடப்படுகின்றது.


வருங்கால சமுதாயம் தலைநிமிர்ந்து வாழ... நிகழ்கால செல்வங்களுக்கு கல்வி அளிப்போம்!
அறியாமை நம்மை விட்டும் தொலைந்து போக... நம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி வழங்குவோம்!!
கருத்து வேறுபாடுகளை களைவோம்!
கல்விப் பணிகளில் ஒன்றிணைவோம்!!

No comments: