January 30, 2011
தமுமுகவின் சிறப்புப்பொதுக்கூட்டம்
விடுதலைப்பொன்விழா ஆண்டு

January 09, 2011
ஆம்புலன்ஸ் உருவான வரலாறு:
இன்று ஆம்புலன்ஸ் தினம்
உயிருக்கு போராடும் நோயாளியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ் இன்று (ஜன.8) முதலுதவி சிகிச்சை, உயிர் காக்கும் மருந்துகள் என "மினி மொபைல் ஆஸ்பத்திரி'யாக வலம் வருகிறது.
இந்த ஆம்புலன்ஸ் உருவான வரலாறு 17ம் நூற்றாண்டில் துவங்குகிறது. அந்த காலக்கட்டத்தில் காயம்பட்ட போர் வீரர்களை சிகிச்சை மையத்திற்கு எடுத்துச் செல்ல, இரு மூங்கில் கம்புகளில் இணைக்கப்பட்ட துணியை (ஸ்டிரெச்சர்) பயன்படுத்தினர். இதுதான் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உருவாகுவதற்கான கரு எனலாம். பின், குதிரை வண்டி, மோட்டார் வாகன வண்டி ஆம்புலன்ஸ் என பல பரிமாணங்களை பெற்றன. கி.பி. 18ம் நூற்றாண்டில் தான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. மகாத்மா காந்தி கூட, தென்னாப்பிரிக்காவில் "இந்தியன் ஆம்புலன்ஸ் கிராப்ஸ்' என்ற நிறுவனத்தை துவக்கி, ஸ்டிரெச்சர் தூக்கும் ஊழியராகவும் இருந்தார். இந்தியாவில் முதன்முறையாக 1914ல் மும்பையில் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை, பணம் கொடுத்து அழைத்துச் செல்லும் வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ், 2005 ஆகஸ்ட்டில் "108' என்ற பெயரில், இலவச ஆம்புலன்ஸ் திட்டமாக, ஆந்திராவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 3000 ஆம்புலன்ஸ்கள் இலவச சேவையில் ஈடுபட்டுள்ளன. அவசர கால மேலாண்மை ஆராய்ச்சி மையம் இதை நிர்வகிக்கிறது. இடத்தின் தன்மைக்கு ஏற்ப, "108' ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்படுகிறது. நீர்நிலைகள் அதிகமுள்ள அசாமில் படகையே ஆம்புலன்சாக மாற்றி உள்ளனர். மலைப்பகுதியான உத்தரகாண்ட் மாநிலத்தில், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. "108'ஐ குறிக்கும் வகையில், ஆண்டின் முதல் மாதமான இந்த ஜனவரியில், 8 ம் தேதியான இன்று தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
உயிர்காக்கும் இந்த உன்னத செயலுக்கு இறைவனிடம் கூலியை எதிர்பார்த்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் சார்பாக அனைத்து சமுதாய மக்களுக்காக இலவச ஆம்புலன்ஸ் அர்பணிப்பு எண்ணிக்கை 100ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது. அனைத்து சமுதாய இயக்கங்களுக்கு மத்தியில் ஆம்புலன்ஸ் அர்பணிப்பில் தமுமுக மிகச்சிறந்து முன்உதாரணமாக விளங்குகிறது. எல்லா புகழும் இறைவனுக்கே..!
December 18, 2010
குவைத் சிறையில் சிக்கி சீரழியும் தமிழர்கள் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க குவைத் தமுமுக வலியுறுத்தல்:
வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் தமிழர்கள் அங்கு போலி விசா மூலம் வந்தவர் என்று கண்டறியப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். இவ்வாறு ஆண்டுக் கணக்கில் சிறையில் வாடும் தமிழர்களை காவலர்கள் சித்ரவதை செய்கின்றனர். இவர் களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குவைத் தமுமுக வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாட்டிலிருந்து அரேபியர்களின் வீடுகளில் வேலை பார்ப்பதற்காக டிரைவர்கள், தோட்டத் தொழிலாளர்கள், சமையல்காரர் கள், வீட்டுபணிப் பெண் கள் என பல்வேறு வேலைகளுக்கு தமிழர்கள் குவைத், துபாய், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு செல்கின்றனர்.
இவர்கள் அங்கு நிம்மதியாக வேலை பார்க்க முடிவதில்லை. பல லட்சம் கடன் வாங்கி வெளிநாட்டில் வேலைக்கு வரும் இவர்கள் இன்னும் சில வருடங்களில் கடனை அடைத்து வீடு வாங்கி, மகள் திருமணம், மகன் கல்வி என செட்டிலாகி விடலாம் என கனவுகளில் இருக்கும் போதே வேலையை விட்டு துரத்தப்படுகின்றனர்.
வெளிநாட்டில் பணியாற்றும் தொழிலாளர்கள் பலர் ஏஜென்ட்களால் “டூரிஸ்ட்” விசாக்களில் அனுப்பப்படுவதால் சம்பந்தப் பட்டக் அரசுகளால் கைது செய்யப்பட்டு சிறையில் வாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதவிர வேலைக்கு சேர்ந்த இடத்தில் முதலாளியின் கொடுமை தாங்க முடியாமல் வெளியே ஓடி வரும் தொழிலாளர்கள் மீது அவர்கள் போலீசில் புகார் கொடுக்கின்றனர். இதில் உடனே நடவடிக்கை எடுக்கும் போலீசார் அவர்களை சிறையில் அடைத்து விடுகின்றனர். இதுபோல் சம்பளம் போதா மல் ஒரு முதலாளியிடமிருந்து இன்னொரு முதலாளியிடம் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் சிறையிலடைக்கப்படுகின்றனர்.
பெரும்பாலான வழக்குகள் பொய் வழக்குகள் ஆகும். தமிழர்கள் மட்டுமல்லாது, பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சிறையில் வாடி வருகின்றனர். இந்திய சிறைகளில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகளை குடும்பத்தினர் பார்த்து செல்லும் வாய்ப்பு இருப்பதால் அவர்கள் ஓரளவு மனஆறுதல் அடையும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் வெளிநாட்டில் அபாண்ட பழிசுமத்தி சிறையிலடைக்கப்படுபவர்கள் அனா தையாக, ஆதரவற்றவர்களாக, யாரும் உதவி செய்ய முடியாதவர்களாக திண்டாடி வருகின்றனர். தமுமுக, பிரன்ட்லைனர் உள்ளிட்ட அமைப்புகள் உதவி செய்தாலும் முழுமையாக உதவி செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.
தமிழகத்தில் அண்ணா பிறந்தநாள், காந்திஜெயந்தி ஆகிய நாட்களில் நன்னடத் தை காரணங்களுக்காக கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர். குவைத் நாட்டில் பிப்.25,26 தேதிகளில் சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது.
அதையொட்டி பல ஆண்டுகள் சிறையில் வாடும் தமிழர்களை விடுவிக்க மத்திய அரசு மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கல்வியின்மையால் பலர் போலி விசாக்களை ஏஜன்ட்கள் கொடுப்பதை அறியாமல் இங்கு வந்து அல்லல்படுகின்றனர்.
எனவே விசாவை பரிசோதனை செய்ய தனி அலுவலகத்தை தமிழகத் தின் முக்கிய நகரங்களில் அமைக்க வேண்டும். வெளிநாட்டில் வேலை செய்யும் தமிழர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தீர்ப்பதற்கு தனி அமைச்சகம் அமைத்த அரசு அதனை முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளிநாட்டில் வேலை செய்து விட்டு தள்ளாத வயதில் தாயகம் திரும்பும் தமிழர்களுக்கு கேரளாவில் இருப்பது போன்று தனிநல வாரியம் அமைக்க வேண்டும்.
தஞ்சை, காரைக்கால், புதுச்சேரி, விழுப்புரம், திருச்சி, திருவாரூர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழர்கள் தான் அதிகமானோர் குவைத், துபாய் சிறைகளில் வருடக் கணக்கில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமுமுக வின் குவைத் மண்டல நிர்வாகி பீர்மரைக்காயர் மற்றும் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
December 14, 2010
November 20, 2010
November 13, 2010
November 02, 2010
தீண்டாமைச் சுவர் என்ற பெயரில் அரசியல்
திருச்சி மாநகராட்சி 40வது வார்டு எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள பழைய சக்திவேல் காலனியில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றன. சுவர் என்று கூறப்படும் வீட்டிற்கு உரிமையாளரான நல்லமுஹம்மதுவின் தந்தை 1964ம் ஆண்டு இந்த காலனியைச் சுற்றி பாதுகாப்பு கருதி சுமார் 10 அடி உயர சுவர் எழுப்பி இருக்கிறார். அந்த காலனியில் அங்கு வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே சாலையும் அமைத்துள்ளார்கள். சாலை முடியும் இடத்தில் 25 ஆண்டுகளுக்கு முன் சுமார் 20 அடி நீளத்தில் ஆஸ்பெடாஸ் வீட்டைக் கட்டி தனது தங்கைக்கு வழங்கி உள்ளார்.
தற்பொழுது இந்த காலனிக்குப் பின்புறம் முத்து மாரியம்மன் கோவில் தெரு என்ற பெயரில் வீடுகள் உருவாகி அங்கு அனைத்து சமூக மக்களும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 25ம் தேதி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திருச்சி மாவட்ட நிர்வாகிகள், முத்து மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள தலித் மக்கள் பழைய சக்திவேல் காலனியில் வரக்கூடாது என வேண்டுமென்றே தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது என பொய்க் கதை புனைந்து 27ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதில் நவம்பர் 9ம் தேதிக்குள் மாவட்ட நிர்வாகம் சுவரை இடிக்காவிட்டால் நாங்களே இடிப்போம் என கூறியுள்ளனர் வலது கம்யூனிஸ்ட்கள்.
இந்நிலையில் 28ம் தேதி சர்ச்சைக்குள்ளான பகுதியைப் பார்வையிட வந்த இடது கம்யூனிஸ்ட் எம்.பி திரு.லிங்கம் அவர்கள், இந்த சுவர் தீண்டாமை சுவர் அல்ல எனவும், மனிதாபிமானத்துடன் பேசி இப்பிரச்சனையை இருவரும் தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும், அதற்கு மாவட்ட மாநகராட்சி நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து 29ம் தேதி சர்ச்சைக்குள்ளான பகுதியை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் எஸ். முஹம்மது ஜெய்னுலாபுதீன் பார்வையிட்டு அப்பகுதி மக்களை சந்தித்தார். அவருடன் தமுமுக, மமக மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தார்கள். அங்கு வந்த பத்திரிக்கை நிருபர்களிடம் மாநில அமைப்பு செயலாளர், ‘‘இது ஒருபோதும் தீண்டாமைச் சுவர் ஆகாது. எனவே அரசியல் ஆதாயத்துக்காக விளம்பரம் தேட முயற்சிக்கும் கட்சிகள் மீது அரசும் காவல்துறையும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார்.
‘‘மெயின் ரோட்டில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள பழைய சக்திவேல் காலனியில் உள்ள ஆஸ்பெடாஸ் வீட்டையும் இடித்து விட்டால் முத்து மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டு மனைகளுக்கு விலை உயரும் அதனால் தாங்கள் அதிகம் பயன் அடையலாம் என நினைக்கும் சில நபர்களுக்காக ஒரு தூய்மையான நேர்மையான அரசியல் கட்சி வாதாடுவது உகந்தது அல்ல என்பதை மனிதநேய மக்கள் கட்சி சார்பாக சொல்லிக் கொள்கிறோம்’’ என்றும் அவர் மேலும் கூறினார்.




