இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

April 30, 2008

சத்தியம் வருகிறது. அசத்தியம் அழிகிறது

உலகத் தமிழ் வலைப்பூ வரலாற்றிலேயே முதன் முறையாக...

ஏகத்துவ பிரச்சாரத்தில் பல வருடங்கள் பணியாற்றிய...

மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்களின் பொறுமையின் எல்லையாக...

இதுவரை தமிழ் முஸ்லிம்களுக்கு பீஜெயே சொல்லியிராத...

அரிய பல உண்மைகளைத் தாங்கி மலர்கிறது...
இன்ஷா அல்லாஹ்

www.tmpolitics.net

விரைவில் எதிர் நோக்குங்கள்...

சில நாட்களிலேயே...

பி.ஜே மற்றும் ததஜ வின் முகத்திரையை கிழிக்கும்,

உண்மைகளை அம்பலப்படுத்தும்,

ததஜ வின் மூலை மழுங்கிய கூட்டத்தினருக்காக

மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்களின் அறிவுரைகள் அடங்கிய பதில்.
விரைவில் எதிர் நோக்குங்கள்...

உண்மைகள் என்றும் உரங்குவதில்லை....

பொய்யர்களின் கூற்றுக்களை தவிடு பொடியாக்க வருகின்றது...

மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவாக்ளின் அறிவுரைகள்...
இதன் பின்னரும் சிந்தனை உள்ள சகோதரர்கள் இப்பரிவினைவாதக் கும்பலோடு நீடிப்பரா???

கல்வியில் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்!

மாணவர்களுக்கு தற்போது விடுமுறைக் காலம். குறிப்பாக பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்துள்ள மாணவர்கள், மற்ற மாணவர்களைப் போல் இந்த கோடை விடுமுறையை நிம்மதியாக கழிக்க முடியாது. அதற்கு காரணம், வரவிருக்கும் தேர்வு முடிவுதான். எழுதிய தேர்வை மாற்றமுடியாது. எதிர்பார்த்தது கிடைக்கலாம். அல்லது ஏமாற்றமாகக்கூட முடியலாம்.


நீங்கள் நினைத்தால் உங்கள் எதிர்காலத்தை வளமானதாக மாற்றிக் கொள்ளலாம். அதற்கு இப்போதும் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்எடுக்க வேண்டும். அதில் தவறும் பட்சத்தில், அடுத்தடுத்த ஆண்டுகளில்மிகச்சிறப்பாக படித்து மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று நீங்களேஉறுதி கொள்ளுங்கள். இனி வரும் இரண்டு ஆண்டுகள்தான் உங்கள் வாழ்க்கையை நிர்ணயம் செய்யப் போகின்றன. எல்லா விஷயமும் எளிதாக நடக்க, வேலை கிடைக்க அதிக மதிப்பெண்கள் உங்களுக்கு உதவும்.

பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வாழ்க்கையின் திருப்பு முனைதான் இல்லை என்று சொல்வதற்கு இல்லை. ஆனால் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் நம்வாழ்க்கையில் தோல்வி அடைந்துவிட்டோமோ... இனி எந்த வாய்ப்பும் இல்லையோ என்ற கவலை மாணவர்களுக்கு எழக்கூடாது. அப்படி எழுந்துவிட்டால், நீங்கள் வாழ்க்கையில் எழ முடியாது.


இன்று வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் உள்ள அனைவரும் பனிரெண்டாம் வகுப்பில் 99 சதவீதம் எடுத்தவர்கள் என்று கூறிவிடமுடியாது. வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு கல்வி மிகவும் உதவியாக இருக்கும். அந்த கல்வியால் கிடைத்த அறிவை நீங்கள் பயன்படுத்தி முன்னேற வேண்டியது உங்கள் கைகளில் உள்ளது. மிக நன்றாக படித்தும் வேலைக்கு செல்ல முடியாமல் சிலர் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். பெற்ற கல்வியை பயன்படுத்தாமல் அவர்கள் இருக்கலாம். உங்களால் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும், ஏதாவது துறையில் இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் உங்கள் திறமையை மீட்டெடுக்க முடியும் என்று நீங்கள் நினைத்தீர்களேயானால், கல்லூரி வாழ்க்கைக்கு செல்ல விருக்கும் நீங்கள் அதற்கான இலக்கை இப்போதே நிர்ணயம் செய்யுங்கள். மூன்று அல்லது நான்கு ஆண்டு கல்லூரி படிப்பு சில மாதங்களைப் போல் ஓடிவிடும். அதுவரை நீங்கள் கொண்டிருக்கும் லட்சியத்துக்கு துளியளவும் பங்கம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் எப்போதும் ஒளிர்ந்து கொண்டே இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் முடிவு செய்யுங்கள். நான்கு பேரிடம் கலந்து ஆலோசியுங்கள். முடிவு எடுப்பதற்கு முன் எத்தனை பேரிடம் வேண்டுமானாலும் யோசனை கேட்கலாம். முடிவு எடுத்த பின், அதைப் பற்றி மீண்டும் யோசித்து குழம்புவதை இவையெல்லாம் தவிர்க்கும்.
புதிய வாழ்க்கைப் பயணத்துக்கு வாழ்த்துக்கள்!

மொபைல் போன்களின் கோட் எண்கள்

மொபைல் போன்களைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் ஒன்றிரண்டு கோட் எண்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் மொபைல் போனின் அடிப்படைத் தன்மைகளை அறிய சில கோட் எண்களை வகுத்து தந்துள்ளன. இது மொபைல் போனின் பழுது பார்ப்பவர்களுக்குத் தெரியும். அவற்றில் சில இங்கு தரப்படுகின்றன.

எல்.ஜி. போன்களின் கோட் எண்கள்
போனின் டெஸ்ட் மோடுக்குச் செல்ல –– 2945#*#
எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர – 2945*#01*#
மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய – *8375#
மொபைல் போனின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை அறிய –*#06# (இது எந்த போனுக்கும் பொருந்தும்.)
போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட–2945#*70001#
எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட 1945#*5101#
எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட 2945#*5101#
எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட 2947#*


நோக்கியா போன்களுக்கான ரகசிய கோட் எண்கள்
இவற்றின் மூலம் உங்கள் போன் குறித்த சில அடிப்படைத் தகவல்களை அறியலாம். பிரச்னை இருக்கும் பட்சத்தில் இவை உங்களுக்கு பிரச்னையின் தன்மையை அறிய உதவும்.

*#7780# –பேக்டரி செட்டிங்ஸை போனில் மீண்டும் அமைக்க
*#3283# போன் தயாரான தேதியை அறிந்து கொள்ள
*#746025625# – சிம் கடிகாரத்தை நிறுத்த
*#67705646# ஆப்பரேட்டர் லோகோவை நிறுத்த
*#73# – கேஸ் ஸ்கோர் மற்றும் போன் டைமரை ரீசெட் செய்திட
*#0000#–மொபைல் சாப்ட்வேர் பதிப்பு குறித்து அறிய
*#92702689# – மொபைல் வாரண்டி குறித்த செட்டிங்ஸ் அறிய(சீரியல் எண், எங்கு தயாரானது, வாங்கப்பட்ட தேதி, ரிப்பேர் செய்த தேதி, போன் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தாங்கும் போன்ற தகவல்கள்)


சாம்சங் போன்களுக்கான குறியீடு எண்கள்
சாம்சங் தந்த பழைய போன்களுக்கு இது பொருந்தாமல் இருக்கலாம்.

*#9999# – மொபைல் சாப்ட்வேர் பதிப்பு எண் அறிய
#*3849#– சாம்சங் போனை ரீ பூட் செய்திடும்
#*2558# – மொபைல் டைமை ஆன் / ஆப் செய்திட
#*7337# – அண்மைக் காலத்தில் வெளியான சாம்சங் போன்களை அன்லாக் செய்திட
#*4760# – போனின் ஜி.எஸ்.எம். வசதிகளை ஆப் / ஆன் செய்திட
*#9998*246# – மெமரி மற்றும் பேட்டரி குறித்த தகவல்களை அறிய
*#7465625# –– மொபைலின் லாக் எந்நிலையில் உள்ளது என்று அறிய
*#0001# – மொபைலின் சீரியன் எண்ணை அறிய
*2767*637# – மொபைலின் கோட் எண்ணை அன்லாக் செய்திட
*#8999*636# –மொபைலின் ஸ்டோரேஜ் திறனைக் காட்ட
*2562#– சாம்சங் மொபைல் போன்களை ரீ பூட் செய்திட.

இதுவரை இன்று போதும்.

பாத்ரூமில் வேண்டாமே மொபைல்

நபி(ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும் போது அவர்களைக் கடந்துச் சென்ற ஒரு மனிதர் அவர்களுக்கு ஸலாம் கூறினார். நபி(ஸல்)அவர்கள் பதில்(ஸலாம்) கூறவில்லை. இப்னுஉமர்(ரலி) முஸ்லிம், திர்மிதி, நஸயீ, அபூதாவூத், அஹமத், இப்னுமாஜா


இரண்டு மனிதர்கள் மலஜலம் கழிக்கச் சென்று தங்களின் மர்மஸ்தானங்களைத் திறந்த நிலையில் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அல்லாஹ் இந்தக் காரியத்திற்காகக் கோபப் படுகிறான். அபூஸயீதுல் குத்ரி (ரலி) - அஹ்மத், அபூதாவூத், இப்னுமாஜா

மொபைல் போனை குளியல் அறைக்கு எடுத்துச்செல்லாதீர்கள். எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் நீர் உள்ள வாளி அல்லது கழிவுத் தொட்டியில் விழ வாய்ப்பு உள்ளது. எலக்ட்ரானிக் சாதனங்களுக்குத் தண்ணீர் பெரிய எமன் என்பது நினைவிற்கு இருக்கட்டும். குளியலறையில் கூட போன் வரும் என்றால் அந்த அழைப்பினை பேசிய பின்னர் குளிக்கச் செல்லவும். சிறுவர்களிடம் தர வேண்டாம். அவர்களுக்கு அதன் செயல்பாடு தெரியாது. கீகளைத் தாறுமாறாக அழுத்தி செட்டிங்ஸ் மாறலாம். பிடித்தமான படங்கள் மாறலாம். கோபத்தில் அவர்கள் போனை கீழே எறிந்தால் அப்போதைக்கு உங்களுக்கு போன் இல்லையே. போனோடு கயறு இணைத்து சட்டை பாக்கெட்டில் வைத்திருக்கலாம். இது நீங்கள் குனிந்து எதனையாவது எடுக்கையில் போன் கீழே விழுவதனைத் தடுக்கிறது. இதனால் போன் உடையும் வாய்ப்பு நீங்குகிறது. பேன்ட் பாக்கெட்டில் போனை வைக்காதீர்கள். உங்கள் கால் மேல் பாகம் கதவு அல்லது தூண் போன்ற கனமான ஏதாவது ஒன்றின் மீது மோதுகையில் உங்கள் காலைப் போன் பாதுகாக்கும். ஆனால் போனுக்குத் திரையை ரூ.5,000 அல்லது ரூ.8,000 செலவழித்து மாற்ற வேண்டியதிருக்கும். பரவாயில்லையா? இரண்டு தலையணை வைத்து படுக்கிறீர்கள். இரவில் யாராவது அழைத்தால் பேச போனை இரண்டிற்கும் நடுவே பாதுகாப்பாக வைக்கிறீர்கள். சரி. காலையில் நீங்கள் உங்கள் வேலையைப் பார்க்கச் செல்கையில் உங்கள் மனைவி, குழந்தை அல்லது வேலைக்காரி தலையணைகளுக்கிடையில் போன் இருப்பது தெரியாமல் இரண்டு தலையணைகளையும் தூக்கி சற்று தள்ளி ஷெல்பில் போடலாம். ஏன் இந்த வீண் விளையாட்டு? தூங்கச் செல்கையிலும் போன் அருகே வேண்டுமென்றால் பாதுகாப்பான இடத்தில் வைக்கவும். எழுந்தவுடன் போனை எடுத்து வழக்கம்போல் பயன்படுத்தவும். பாக்கெட் மற்றும் டைனிங் டேபிளில் போனை வைக்கையில் உங்களுக்கு இடது புறம் போனை வைத்திடுங்கள். அப்போதுதான் சாப்பிடும்போது போன் வந்தால் அடுத்தவரை அழைத்து பாக்கெட்டிலிருந்து போனை எடுக்கச் சொல்லும் நிர்ப்பந்தம் இருக்காது. டைனிங் டேபிளிலும் இடது பக்கம் இருந்தால் எடுத்துப் பேசுவது எளிது.

கம்ப்யூட்டரில் டேட்டா அளவு – புதிய கோணத்தில்

1 கிலோ பைட் – 1000 கேரக்டர்கள் – ஒரு ஸ்கிரீன் நிறைய செய்தி என வைத்துக் கொள்ளுங்கள்.

1 மெகா பைட் – பத்து லட்சம் எழுத்துக்கள் – சராசரியாக என்றால் 300 பக்கங்கள் அடங்கிய ஒரு நூல்.

1 கிகா பைட் –– நூறு கோடி எழுத்துக்கள் – ஓராயிரம் நூல்கள்.

1 டெரா பைட் ––ஒரு ட்ரில்லியன் எழுத்துக்கள் (அதாவது லட்சம் கோடி எழுத்துக்கள) பத்து லட்சம் நூல்கள்.

1 பீடா பைட் –– குவாட்ரில்லியன் எழுத்துக்கள் (பத்துகோடியே கோடி 10 பவர் ஆப் 15, அதாவது 15 முறை பத்து போட்டு பெருக்கவும். நூறு கோடி நூல்கள்.

1 எக்ஸா பைட் –– குயின்டில்லியன் ( 10 பவர் ஆப் 18 ) லட்சம் கோடி நூல்கள்.

கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை இவ்வளவு தான் இப்போது புழக்கத்தில் சொல்லப்படுகிறது. டெராபைட்டோடு தற்போதைக்கு நிற்கிறோம். ஆனால் நிச்சயம் உயரும் என எதிர்பார்க்கிறோம். எண்களின் பெரிய எண் குறித்து தலை சுற்றுகிறதா? இன்னும் உயரச் செல்லும் எண்களின் பெயர் தெரிய வேண்டுமானால்
http://en.wikipedia.org/wiki/Quintillion என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்று அங்குள்ள பட்டியலை காப்பி செய்து வைத்துக் கொள்ளவும்.

கல்வி உரிமை

சமமான சமுதாயம் உருவாக இன்றும் நம்மால் உணரப்படவேண்டிய காரணியாக இருப்பது கல்வி உரிமை தான். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 60 ஆண்டுகளுக்கு முன்பே இலவச மற்றும் கட்டயாக் கல்வியை வலியுறுத்தியது. கல்வியை ஒரு உரிமையாக ஏற்றுக் கொள்ளும் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டே 6 ஆண்டுகள ஆகிவிட்டன. ஆனால் கல்வியை உரிமையாக நடைமுறைப்படுத்துவதில் இன்னமும் தடைகள் இருக்கத்தான் செய்கின்றன. கல்வியில் பலர் சேருவது பெரிய சாதனையல்ல. ஆனால் சேருபவர்களில் பாதிப் பேர் பாதியில் அல்லது தொடக்கத்திலேயே விலகுவதும் சாதனையல்ல அல்லவா? இது தான் இன்றைய இந்திய கல்வியின் நிலை.

தரமான கல்வியை பெரும்பாலான இந்திய குழந்தைகள் பெறவில்லை என்று 11வதுஐந்தாண்டுத் திட்டம் மதிப்பிடுகிறது. செகண்டரி கல்வி நிலை வரையிலாவது அனைவரும் மிகத் தரமான கல்வியைப் பெற வேண்டும் என்பதே இன்று பெரும்பாலான கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

மிகச் சிறப்பான கல்வி தரும் நாடுகளாக 2005ம் ஆண்டில் பின்லாந்து, கனடா, கியூபா மற்றும் கொரியா நாடுகள் யுனெஸ்கோவால் பட்டியலிடப்படுகின்றன. மிகத்தரமான ஆசிரியர்களைக் கொண்டு தரமான கல்வியைத் தருவதில் முனைப்புடன் இந்தநாடுகள் தொடர்ந்து செயல்படுவதே இவற்றின் வெற்றிக்குக் காரணம். இந்த நாடுகள் தரமான கல்வியை எந்த பாகுபாடும் இன்றி சமமாக அனைவரும் பெறுவதை குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றன.

வளர்ந்த நாடுகள் என கருதப்படும் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இன்னமும் பொருளாதார ரீதியான சமமில்லாத சூழல் நிலவுவதால் இந்த நாடுகளில் உள்ள ஏழை மாணவர்களுக்கு தாங்க முடியாத மனப் பிறழ்வு இருப்பதாக அறியப்பட்டுள்ளது. எனவே தரமான கல்வியை பாகுபாடின்றி அனைவரும் பெற வேண்டும் என்பதே நமது அரசுக்கும் இந்த நாடுகளின் கல்வித்துறை சுட்டிக்காட்டும் உண்மை. அரசுப் பள்ளிகளை தரத்தில் மேம்படுத்துவதும், சிறப்பான தனியார் பள்ளிகளில் அனைவராலும் சேர முடிய வேண்டும் என்பதே நமது அரசின் முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும்.


இது போலவே மற்றொரு முக்கியமான அம்சம் தாய்மொழி புறக்கணிப்பு. கேந்திரிய வித்யாலயா போன்ற பள்ளிகளும் தனியார் பள்ளிகளும் தாய்மொழிக்கு எந்த முக்கியத்துவமும் தருவதில்லை. எனவே உண்மையான அறிவை மாணவர்கள் பெறுவதில் பெரும் தடைகள் இருக்கின்றன. 11வது ஐந்தாண்டு திட்டத்தில் இந்திய கல்வித்துறை கூடுதல் முனைப்புடனும் நோக்கத்தோடும் செயல்பட்டால் தான் கல்வியை உரிமையாக வரையறுக்கும் நமது நோக்கம் நிறைவேறும்.
இன்ஷா அல்லாஹ்

விண்டோஸ் எக்ஸ்பிக்கு அளிக்கும் சப்போர்ட்

புதிய தொகுப்புகளை அறிமுகப்படுத்தியவுடன் பழைய தொகுப்புகளுக்கு அளித்துவரும் உதவிக் குறிப்புகளை நிறுத்திவிடுவது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வாடிக்கை. அதாவது அது குறித்த புதிய பிரச்னைகளுக்கு எந்தவித தீர்வுகளையும் மைக்ரோசாப்ட் எடுக்காது என்பது முடிவு. ஆனால் இணைய தளத்தில் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் சிஸ்டத்துடன் வந்துள்ள உதவிக் குறிப்புகள் அப்படியே தான் இருக்கும். தொகுப்பைப் பயன்படுத்துவதற்கான லைசன்ஸ் புதுப்பிக்கப்பட மாட்டாது. நீங்கள் புதிய தொகுப்பிற்குத்தான் அப்கிரேட் செய்திட வேண்டும். இனி பிரச்னைக்கு வருவோம். இரண்டு வாரங்களுக்கு முன் வரும் ஜூன் 2008 உடன் விண்டோஸ் எக்ஸ்பிக்கான ஆதரவை நிறுத்தப் போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்தது. ஆனால் ஏப்ரல் 3 அன்று இன்னொரு அறிவிப்பினை வெளியிட்டது. இன்னும் சிறிது காலத்திற்கு எக்ஸ்பி தொகுப்பிற்கான உதவியை அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. ஜூன் 30, 2010 வரை இதற்கான உரிமத்தை புதுப்பிக்கலாம். ஆனால் இதிலும் ஒரு சிறு கண்டிஷனை மைக்ரோசாப்ட் விதித்துள்ளது. மார்க்கட்டில் விற்பனை செய்யப்படும் குறைந்த விலைக் கம்ப்யூட்டர்களுக்கு மட்டுமே இந்த சலுகை என அறிவித்துள்ளது. எனவே நீங்கள் எக்ஸ்பி கட்டாயம் லைசன்ஸுடன் வேண்டும் என்றால் குறைந்த விலைக் கம்ப்யூட்டரையே வாங்குங்கள். மைக்ரோசாப்ட் இன்னொரு அறிவிப்பினையும் தந்துள்ளது. விண்டோஸ் எக்ஸ்பிக்கான தொழில் நுட்ப உதவியினை வரும் ஏப்ரல் 2009 வரை தரும் என தெரிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் நீங்கள் நீட்டிப்பு காலம் வரை தேவை என ஒத்துக் கொண்டிருந்தால் இந்த உதவி ஏப்ரல் 2014 வரை கிடைக்குமாம். எனவே கவலைப்படாமல் எக்ஸ்பி சிஸ்டத்தைப் பயன்படுத்துங்கள்.

April 28, 2008

வீடியோ இமெயிலுக்கு...

www.eyejot.com

`நலம், நலமறிய ஆவல். சுகம்... சுகம் அறிய ஆவல்!' - இப்படி எத்தனை நூற்றாண்டுகளாகத்தான் கடிதம் எழுதுவது என்று அலுத்துக் கொள்பவர்களுக்கு உதவும் தளம் இது. இமெயில் மூலம் வெறும் எழுத்துகளாக தகவல்களை அனுப்புபவர்கள், வீடியோவாக பேசி சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கலாம். இந்த இணையதளத்தில் இலவச உறுப்பினராவதன் மூலம் இலவசமாக வீடியோ இமெயில்களை அனுப்பலாம். நமது கம்ப்ïட்டரில் வெப்கேம் இருக்க வேண்டியதும் அவசியம். வெப்கேமை ஆன்செய்து விட்டு, நாம் தகவல்களை பேசினால் அப்படியே பதிவு செய்யப்படும். பதிவு செய்யப்பட்ட வீடியோவை, மற்றவர்களின் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். இதன்மூலம் நமது முக பாவனைகளுடன் நமது தகவல்களை மற்றவர்கள் பெற முடியும்.

ஆன்லைன் பாதுகாப்பிற்கு...

www.getnetwise.org

இன்டர்நெட் என்ற ஊடகம் கைப்பிடி இல்லாத கத்தி போன்றது. அதை சரியாக உபயோகிக்கவில்லை என்றால், நம்மையே `பதம்' பார்த்து விடும். எனவே இன்டர்நெட்டை மிகவும் எச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும். குழந்தைகள் இன்டர்நெட்டை பாதுகாப்பாக பயன்படுத்தவும், தேவையற்ற ஸ்பாம் இமெயில்களை தவிர்க்கவும், நமது கம்ப்ïட்டரை `காலி' செய்யும் வைரஸ் மற்றும் ஹாக்கர்களிடம் இருந்து தப்பவும், தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கவும் வழி சொல்லும் இணையதளம் இது. ஒவ்வொரு தலைப்பாக எடுத்துக் கொண்டு, விலாவாரியாக விளக்கி கூறி உள்ளனர். குழந்தைகளுக்கான இணையதளங்கள், ஆபாச இணையதளங்களை தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும் அளித்து உள்ளனர். ஸ்பாம் இமெயில்களிடமிருந்து தப்புவதற்கான வழிமுறைகள், அதற்கு உதவும் இணையதளங்கள் பற்றிய தகவலும் உண்டு. முகமறியாத நபர்களுக்கு நம்மைப்பற்றிய தகவல்கள் சென்று சேராமல் தடுப்பதற்கான வழிமுறைகளையும் அளித்துள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இணையதளத்தை பாதுகாப்பாக சிக்கலின்றி பயன்படுத்த உதவும் நோக்கத்துடன் இந்த இணையதளத்தினர் செயல்படுகிறார்கள். இன்டர்நெட் பாதுகாப்பை விரும்புபவர்கள் தாராளமாக பயன்படுத்தலாம்.

விதவிதமான எழுத்துருக்களுக்கு

www.dafont.com

அரதப்பழசான பாண்ட்-களை இன்னும் வைத்துக்கொண்டு உபயோகிப்பவர்கள் பலர் உண்டு. விதவிதமான, ரகரகமான வகைகளில் எழுத்துருக்கள் எனப்படும் பாண்ட்-களை இலவசமாக வழங்கும் இணைய தளம் இது. பேன்சி, காதல், டெக்னாலஜி என பல்வேறு தலைப்புகளில் ஏராளமான எழுத்துருக்களை அளித்துள்ளனர்.


தொழில் தொடர்பான உபயோகத்திற்கு தெளிவான எழுத்துருக்களும், காதலிக்கு கடிதம் எழுத ஸ்டைலான எழுத்துருக்களையும் அளித்துள்ளனர். நமக்கு தேவைப்படும் எழுத்துருக்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். நாம் விருப்பப்பட்டால் நம்மிடம் இருக்கும் எழுத்துருக்களை இலவசமாக, இங்கு இடம் பெற செய்யலாம். வித்தியாசமான எழுத்துருக்கள் மூலம் மற்றவர்களை அசத்த நினைப்பவர்கள் தாராளமாக உபயோகிக்க வேண்டிய இணையதளம்.