குவைத் நாட்டில் ததஜ செய்து வரும் அடாவடிகளால் அதிருப்தி அடைந்து வரும் பொதுமக்கள் மற்றும் நடுநிலைவாதிகள் 04-01-2008 அன்று நடந்த சம்பவத்தால் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். அதன் விவரத்தை தங்களுக்கு அறியத் தருகின்றோம். தமிழகத்தில் ஆறு விதமான லீக்கர்கள் இருப்பதைப்போல் குவைத்தில் மூன்றுவிதமான ததஜ-வினர் இருக்கின்றனர். என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா. அதுதான் உண்மை. ஆம், காலத்தையும், உழைப்பையும் விரயம் செய்து கதைகளையும் கற்பனைகளையும் எழுத எங்ளிடம் கம்ப்யூட்டர் ஆலிம்சாக்கள் யாரும் இல்லை. விஷயத்திற்கு வருவோம்.
January 06, 2008
சி. ஐ. டி. ஊதிய சங்கு
குவைத் நாட்டில் ததஜ செய்து வரும் அடாவடிகளால் அதிருப்தி அடைந்து வரும் பொதுமக்கள் மற்றும் நடுநிலைவாதிகள் 04-01-2008 அன்று நடந்த சம்பவத்தால் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். அதன் விவரத்தை தங்களுக்கு அறியத் தருகின்றோம். தமிழகத்தில் ஆறு விதமான லீக்கர்கள் இருப்பதைப்போல் குவைத்தில் மூன்றுவிதமான ததஜ-வினர் இருக்கின்றனர். என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா. அதுதான் உண்மை. ஆம், காலத்தையும், உழைப்பையும் விரயம் செய்து கதைகளையும் கற்பனைகளையும் எழுத எங்ளிடம் கம்ப்யூட்டர் ஆலிம்சாக்கள் யாரும் இல்லை. விஷயத்திற்கு வருவோம்.
January 02, 2008
நாகரீகம் என்னும் பெயரால் அநாகரீகம்
நட்சத்திர ஓட்டல்களில் மது அருந்திவிட்டு ஆண்களும், பெண்களும் கட்டிப் பிடித்து நடனமாடினார்கள். சில ஓட்டல்களில் டிஸ்கோ நடனம் களை கட்டியிருந்தது. சில ஓட்டல்களில் நடிகர்-நடிகைகள், துணை நடிகர்-நடிகைகள் குத்தாட்டம் போட்டு, கும்மாளம் போட்டார்கள்.சென்னை மைலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சவேரா நட்சத்திர ஓட்டலிலும் புத்தாண்டு விழா மிகவும் கோலாகலமாக நடந்தது. இங்கு சுமார் 3 ஆயிரம் பேர் ஆண்களும், பெண்களும் புத்தாண்டு விருந்தில் கலந்து கொண்டு, மது அருந்தி ஆட்டம் போட்டார்கள்.
திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில்....
விண்ணப்பத்தில் உள்ள விவரங்கள் எல்லாம் சரியாக இருந்தால் அதிகாரி அந்த இடத்திலேயே பாஸ்போர்ட் வழங்குவதற்கான அனுமதியை வழங்குவதாக எழுதிவிடுவார். போலீஸ் விசாரணை அறிக்கை வந்ததும் அவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுவிடும். எனவே அவர் மீண்டும் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு விசாரணைக்காக வரவேண்டியது இல்லை, பாஸ்போர்ட் தனக்கு வீடு தேடி வந்துவிடும் என்ற முழு திருப்தியுடன் திரும்பி செல்லலாம்.
இதற்காக திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவு என்று ஒன்றும் தனியாக தொடங்கப்பட்டு உள்ளது. அந்த பிரிவில் உள்ள ஊழியர்கள் இதனை முழு அளவில் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள்.
இந்த திட்டம் குறித்து திருச்சி பாஸ்போர்ட் அதிகாரி பாலச்சந்திரன் கூறியதாவது:- இந்த புதிய திட்டத்தின்படி விண்ணப்பதாரர் விண்ணப்பத்தை தாக்கல் செய்துவிட்டு 45 நிமிடத்தில் வெளியே வந்து விடலாம். அதன்பின்னர் அவர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு விசாரணைக்காக வரவேண்டியதே இல்லை. அவர் வெளியே செல்லும்போது உரிய அதிகாரி கையினால் பணம் கட்டியதற்கான ரசீதை வாங்கி கொண்டு நிம்மதியாக செல்லலாம். இதன்மூலம் விசாரணைக்காக பலமுறை அலைவது தவிர்க்கப்படும்.
December 29, 2007
மசூதிக்குள் இறந்த பன்றி வீச்சு - சந்தேகம் பணபாலு
தகவல் அறிந்ததும் தாராபுரம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். மசூதிக்குள் இருந்த பன்றி உடலை அப்புறப்படுத்தினார். மசூதி பொறுப்பாளர், "பன்றியை மசூதிக்குள் வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மசூதிக்குள் பன்றி வீசியதை கேள்விப்பட்ட அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் சாரைசாரையாக வந்து பார்த்தனர். அப்பகுதியில் தொடர்ந்து பதட்டமாக இருந்தது.
அசம்பாவித சம்பவம் எதுவும் நிகழாமல் தடுக்க கோவை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட போலீசார் தாராபுரத்தில் குவிக்கப்பட்டனர். கோவில்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
December 26, 2007
பராக்.... பராக்.... நரமாமிச நரேந்திரமோடி பராக்

பா.ஜ., கொண்டாட்டம் சேலம்: குஜராத் சட்டசபை தேர்தல் வெற்றியை சேலம் பா.ஜ.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றது. மூன்றாவது முறையாக நரேந்திரமோடி முதல்வராக பொறுப்பேற்கிறார்.சேலத்தில் தலைமை தபால் அலுவலகம் முன் பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் தலைமையில் கட்சியினர் கூடினர். அங்கு, பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர்.
சபர்மதி ரயிலில் இறந்து போன மோடியின் சூழ்ச்சி தெரியாத அப்பாவி பாஜக வினரே இந்த வெற்றிக்கான பலிகடாக்கள். இன்று பட்டாசு வெடித்து பரவசப்படும் பாஜகவினர்களே மோடியின் அற்ப சந்தோஷத்திற்காக நாளை நீங்களும் பலிகடாவாக்கப்படலாம்.
தெஹல்கா கண்டறிந்த வீடியோ ஆதாரங்களை யாரும் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. வெகுஜன மக்களால் படிக்கப்படும் எந்த நாளிதழிலும் வெளியிடவுமில்லை. குஜராத்திலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் இந்துவெறி பிடித்த பாஸிஸ சக்திகளின் வெறியாட்டத்தின் போது அகதிகளாக துரத்தியடிக்கப்பட்டவர்கள் இன்றுவரை எல்லையோர முகாம்களிலேயே தங்கி வருகின்றனர். காங்கிரஸும், பாஜகவும் பிரச்சாரம் செய்தது முழுக்க, முழுக்க பாஸிஸ வெறிபிடித்த இந்துக்களிடம் மட்டுமே. தேர்தலில் வாக்களிக்க வந்திருந்தவர்கள் அனைவரும் இந்துக்கள் மட்டுமே. ஊடகங்களின் வீடியோ பதிவுகளுக்காக இஸ்லாமியர்கள் போல் வேடமணிந்த இந்துக்களையே காட்டியுள்ளனர். மூன்று நாட்கள் அரசு இயந்திரத்தையே நிறுத்திவைத்து சிறுபான்மையினர் மீது கொலை வெறித்தாக்குதலை தனது தலைமையிலேயே நடத்திய அராஜக நரமாமிச நரேந்திரமோடிக்கு தேர்தலில் வெற்றி வெற்றியடைந்தது ஒரு வீரச்செயலே அல்ல.
அதுமட்டுமின்றி தேர்தல் மட்டுமே ஒரு தனி மனிதனை, ஒரு மனித மிருகத்தை எடை போடும் அளவீட்டுக்கருவியாகாது. ஏனென்றால், இந்தியாவில் தேர்தல்களின் வரலாற்றை புரட்டிப்பார்த்தால் தேர்தலுக்காகவும், தேர்தல் நேரங்களிலும் நடைபெற்று வந்த அராஜகமும், வன்முறைகளும், கலவரங்களுமே ஜனநாயகத்தை விலைபேசுகின்றது. மேலும் தேர்தல் தினத்தன்று பிற்பகல் நேரங்களே வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்கின்றது. அமைதிப்பூங்காவான தமிழகத்தின் தேர்தல்களங்களே அனலை பறக்கவிடும் போது, கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றை குத்திக்கிழித்து உள்ளிருக்கும் சிசுவை தீயிலிட்டதையும், கணவர் மற்றும் தந்தை கண்ணெதிரே பெண்களைக் கதற கதற கற்பழித்ததையும் உலகுக்கே மறைத்ததையும், உள்ளுக்குள் பெருமை பொங்க புளங்காங்கிதம் அடைந்து பரவசப்பட்டு ஆனந்தத்தில் கொக்கரிக்கும் கொடுங்கோலர்கள் வாழும் குஜராத்தின் தேர்தல்களம் என்ன பாடுபட்டதோ தெரியவில்லை. இவர்களின் இந்த சந்தோஷம் அரவாணி கற்பம் தரித்ததைப்போல் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல்தான் உண்மை ஜனநாயகம் மோடிக்கு ஒருநாளும் வெற்றியைத் தராது என்பது புத்தியில்லாதவனும் விளங்கிக்கொள்ளும் நிதர்சனம். அதைவிடுத்து இந்த வெற்றிக்காக இனிப்பு வழங்குவது, வெடி வெடிப்பது எல்லாம் அரவாணியின் ஆதாரமில்லா சந்தோஷத்தை தான் காட்டுகிறதே தவிர வேறில்லை. அல்லாஹ் அறிவீனர்களின் கண்களை திறக்கட்டும்.
December 17, 2007
கலைஞர் டிவியில் நன்றி அறிவிப்பு மாநாடு

December 13, 2007
மீண்டும்....கொடுத்த வாக்கை காப்பற்றிய முதல்வர்

December 12, 2007
குவைத்தில் நடந்த கண்டனக்கூட்டம்
மேடையில் வீற்றிருக்கும் மண்டலத்தலைவர் சகோ. அமானுல்லாஹ், மண்டலச்செயலாளர் சகோ. ஷநவாஸ் மற்றம் சிறப்பு விருந்தினர் தோழர். ஆர். கே. சரவணன்-(CPI).
துணைச்செயலாளர் முஹம்மது இக்பால் அவர்கள் கண்டனத்தை முன் மொழிகிறார்.
கண்டனக்கூட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர். ஆர்.கே. சரவணன் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.

