இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

August 27, 2011

July 12, 2011

தமுமுக அமைப்புத் தேர்தல் ஆணையர் ஹாஜா நஜ்முதீன் மறைந்தார்

வேதாளை ஹாஜா என்று த.மு.மு.க.வில் அறியப்பட்ட கழகத்தின் தேர்தல் ஆணையர் ஹாஜா நஜ்முதீன் 11.7.2011 அன்று காலமானார், (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).

தமுமுகவின் துவக்கக் காலம் முதலே சமுதாயப் பணிகளில் தீவிர ஆர்வம் காட்டிய சகோதரர் வேதாளை ஹாஜா, கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

வடசென்னை மாவட்டத் துணைத் தலைவராக இருந்தார். இந்தியன் இஸ்லாமிக் மிஷனின் மேலாளராகவும் பிறகு, மக்கள் உரிமையின் மேலாளராகவும் பணியாற்றி, மாநில அமைப்புத் தேர்தல் ஆணையராக நியமிக்கப் பட்டார். சகோ.ஜுல்ஃபிகார் தலைமையில் மாநிலம் முழுவதும் அமைப்புத் தேர்தல்களை நடத்தி முடிக்க வேதாளை ஹாஜா உறுதுணை புரிந்தார்.

பொருளாதார நெருக்கடி, உடல்நலக் குறைவு இவற்றிக்கு மத்தியில் கழகப் பணிகளில் முழு ஆர்வம் காட்டி வந்தார். இவருக்கு நான்கு மகள்கள், ஒருவர ஆலிமா, ஒருவர் இளம் அறிவியல் விலங்கியலில் தங்கப்பதக்கம் வென்று முதுநிலை அறிவியலும் முடித்துள்ளார்.

கழகப்பணிகளுக்கு மத்தியில், குடும்பப் பொறுப்பையும் சிறப்புர கவனித்துள்ள இச்சகோதரர், திடீர் மாரடைப்பால் மரணித்துள்ளார். மறைவுச் செய்தி கேட்டு கழகத் தலைவரும் ராமநாதபுர சட்டமன்ற உறுப்பினருமான பேரா.டாக்டர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் வேதாளைக்கு விரைந்தார்.

தமுமுக மாநிலச் செயலாளர் மௌலா எம்.நாசர், ம.ம.க அமைப்புச் செயலாளர் மண்டல்ம் ஜெய்னுலாபிதீன் மற்றும் ராம நாதபுரம் சுற்றுப்புற மாவட்ட நிர்வாகிகள் நல்லடக்கத்திற்குச் சென்றனர்.

பேரா.ஜவாஹிருல்லாஹ் ஜனாஸா தொழுகை நடத்தினார். திரளான மக்கள் ஜனாசத் தொழுகையிலும், நல்லடக்கத்திலும் பங்கேற்றனர்.

March 01, 2011

குவைத்தில் நடந்த சிறப்புப்பொதுக்கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..,

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை தமுமுக உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பு மாதமாக தமுமுக குவைத்மண்டலத்தின் சார்பாக தீர்மாணிக்கப்பட்டு பிப்ரவரி மாதத்தின் 4 வாரங்களும் பொதுககூட்டங்கள் நடத்தப்பட்டது. நான்கு கூட்டடங்களும் முர்காப் பகுதியின் மன்னு ஸல்வா உணவகத்தில் வாரந்தோறும் மாலை 6.30 மணிமுதல் 9.30 மணிவரை நடந்தது.

தேர்தல் நெருங்கி வரும் இச்சமயத்தில் தொடர் நிகழ்ச்சியாக வாராவாரம் இன்ஷா அல்லாஹ் அதே இடத்தில் அதே நேரத்தில் தொடர்ந்து பொதுக்கூட்டங்கள் நடத்த நிர்வாகத்தினால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இச்செய்தியை படிக்கும் ஒவ்வொறுவரும் குவைத்தில் வசிக்கும் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இன்னும் தத்தமது ஜமாஅத்துக்களைச் சார்ந்தவர்களை தவறாமல் கலந்து கொள்ளச்செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

வஸ்ஸலாம்
தமுமுக குவைத் மண்டலம்
www.q8tmmk.blogspot.com
+965 97493869 - 99851036 - 55428835 - 99108754 - 99369743








January 30, 2011

தமுமுகவின் சிறப்புப்பொதுக்கூட்டம்

இன்ஷா அல்லாஹ்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை 04-02-2011 அன்று குவைத் சிட்டியில் மிர்காப் பகுதியில் மன் அல் ஸல்வா உணவகத்தில் மாலை 6:30 மணியளவில் தமுமுக குவைத் மண்டலத்தின் ஏற்பாட்டில் அதிர வைக்கும் சிறப்புப் பொதுக்கூட்டம் தமுமுக செயல்வீரர்களுக்காகவும். உறுப்பினர்களுக்காகவும், ஆதரவாளர்களுக்காகவும், சமூக ஆர்வலர்களுக்காகவும் நடத்தப்படுகிறது. தாயகத்தில் நடைபெற்ற செயற்குழு, பொதுக்குழுவில் எடுத்த முடிவுகள் பற்றியும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசனைகள் செய்யப்படும்.

இத்தகவலை படிக்கும் தமுமுக ஆர்வலர்கள் யாவரும் குவைத்தில் வசிக்கும் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு தெரியப்படுத்தி தவறாமல் கலந்து கொள்ளச்செய்யவும் அரங்கத்தில் உறுப்பினர் சேர்க்கையும் நடைபெறும். மக்கள் உரிமை சந்தாவும் சேர்க்கப்படும்.

வஸ்ஸலாம்
நிர்வாகிகள்
தமுமுக குவைத் மண்டலம்
(+965) 97493869, 99851036, 55428835
tmmkkwt@gmail.com

விடுதலைப்பொன்விழா ஆண்டு



குவைத் நாட்டில் இந்த வருடம் விடுதலை பொன்விழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது. நாடெங்கும் மின்விளக்குகளும் அலங்காரத் தோரணங்களும். குடிமக்களுக்கு எண்ணற்ற சலுகைகளும் அள்ளி வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் இந்த வருடம் முழுவதும் கோலாகலமாக கொண்டாட முடிவு செய்து மன்னரின் ஆலோசனையின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் புகைப்படம் தொடரும் பதிவுகளில்...

January 09, 2011

ஆம்புலன்ஸ் உருவான வரலாறு:

இன்று ஆம்புலன்ஸ் தினம்
உயிருக்கு போராடும் நோயாளியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ் இன்று (ஜன.8) முதலுதவி சிகிச்சை, உயிர் காக்கும் மருந்துகள் என "மினி மொபைல் ஆஸ்பத்திரி'யாக வலம் வருகிறது.

இந்த ஆம்புலன்ஸ் உருவான வரலாறு 17ம் நூற்றாண்டில் துவங்குகிறது. அந்த காலக்கட்டத்தில் காயம்பட்ட போர் வீரர்களை சிகிச்சை மையத்திற்கு எடுத்துச் செல்ல, இரு மூங்கில் கம்புகளில் இணைக்கப்பட்ட துணியை (ஸ்டிரெச்சர்) பயன்படுத்தினர். இதுதான் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உருவாகுவதற்கான கரு எனலாம். பின், குதிரை வண்டி, மோட்டார் வாகன வண்டி ஆம்புலன்ஸ் என பல பரிமாணங்களை பெற்றன. கி.பி. 18ம் நூற்றாண்டில் தான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. மகாத்மா காந்தி கூட, தென்னாப்பிரிக்காவில் "இந்தியன் ஆம்புலன்ஸ் கிராப்ஸ்' என்ற நிறுவனத்தை துவக்கி, ஸ்டிரெச்சர் தூக்கும் ஊழியராகவும் இருந்தார். இந்தியாவில் முதன்முறையாக 1914ல் மும்பையில் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை, பணம் கொடுத்து அழைத்துச் செல்லும் வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ், 2005 ஆகஸ்ட்டில் "108' என்ற பெயரில், இலவச ஆம்புலன்ஸ் திட்டமாக, ஆந்திராவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 3000 ஆம்புலன்ஸ்கள் இலவச சேவையில் ஈடுபட்டுள்ளன. அவசர கால மேலாண்மை ஆராய்ச்சி மையம் இதை நிர்வகிக்கிறது. இடத்தின் தன்மைக்கு ஏற்ப, "108' ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்படுகிறது. நீர்நிலைகள் அதிகமுள்ள அசாமில் படகையே ஆம்புலன்சாக மாற்றி உள்ளனர். மலைப்பகுதியான உத்தரகாண்ட் மாநிலத்தில், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. "108'ஐ குறிக்கும் வகையில், ஆண்டின் முதல் மாதமான இந்த ஜனவரியில், 8 ம் தேதியான இன்று தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

உயிர்காக்கும் இந்த உன்னத செயலுக்கு இறைவனிடம் கூலியை எதிர்பார்த்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் சார்பாக அனைத்து சமுதாய மக்களுக்காக இலவச ஆம்புலன்ஸ் அர்பணிப்பு எண்ணிக்கை 100ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது. அனைத்து சமுதாய இயக்கங்களுக்கு மத்தியில் ஆம்புலன்ஸ் அர்பணிப்பில் தமுமுக மிகச்சிறந்து முன்உதாரணமாக விளங்குகிறது. எல்லா புகழும் இறைவனுக்கே..!

December 18, 2010

குவைத் சிறையில் சிக்கி சீரழியும் தமிழர்கள் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க குவைத் தமுமுக வலியுறுத்தல்:

வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் தமிழர்கள் அங்கு போலி விசா மூலம் வந்தவர் என்று கண்டறியப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். இவ்வாறு ஆண்டுக் கணக்கில் சிறையில் வாடும் தமிழர்களை காவலர்கள் சித்ரவதை செய்கின்றனர். இவர் களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குவைத் தமுமுக வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து அரேபியர்களின் வீடுகளில் வேலை பார்ப்பதற்காக டிரைவர்கள், தோட்டத் தொழிலாளர்கள், சமையல்காரர் கள், வீட்டுபணிப் பெண் கள் என பல்வேறு வேலைகளுக்கு தமிழர்கள் குவைத், துபாய், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு செல்கின்றனர்.


இவர்கள் அங்கு நிம்மதியாக வேலை பார்க்க முடிவதில்லை. பல லட்சம் கடன் வாங்கி வெளிநாட்டில் வேலைக்கு வரும் இவர்கள் இன்னும் சில வருடங்களில் கடனை அடைத்து வீடு வாங்கி, மகள் திருமணம், மகன் கல்வி என செட்டிலாகி விடலாம் என கனவுகளில் இருக்கும் போதே வேலையை விட்டு துரத்தப்படுகின்றனர்.


வெளிநாட்டில் பணியாற்றும் தொழிலாளர்கள் பலர் ஏஜென்ட்களால் “டூரிஸ்ட்” விசாக்களில் அனுப்பப்படுவதால் சம்பந்தப் பட்டக் அரசுகளால் கைது செய்யப்பட்டு சிறையில் வாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


இதுதவிர வேலைக்கு சேர்ந்த இடத்தில் முதலாளியின் கொடுமை தாங்க முடியாமல் வெளியே ஓடி வரும் தொழிலாளர்கள் மீது அவர்கள் போலீசில் புகார் கொடுக்கின்றனர். இதில் உடனே நடவடிக்கை எடுக்கும் போலீசார் அவர்களை சிறையில் அடைத்து விடுகின்றனர். இதுபோல் சம்பளம் போதா மல் ஒரு முதலாளியிடமிருந்து இன்னொரு முதலாளியிடம் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் சிறையிலடைக்கப்படுகின்றனர்.


பெரும்பாலான வழக்குகள் பொய் வழக்குகள் ஆகும். தமிழர்கள் மட்டுமல்லாது, பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சிறையில் வாடி வருகின்றனர். இந்திய சிறைகளில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகளை குடும்பத்தினர் பார்த்து செல்லும் வாய்ப்பு இருப்பதால் அவர்கள் ஓரளவு மனஆறுதல் அடையும் வாய்ப்பு உள்ளது.


ஆனால் வெளிநாட்டில் அபாண்ட பழிசுமத்தி சிறையிலடைக்கப்படுபவர்கள் அனா தையாக, ஆதரவற்றவர்களாக, யாரும் உதவி செய்ய முடியாதவர்களாக திண்டாடி வருகின்றனர். தமுமுக, பிரன்ட்லைனர் உள்ளிட்ட அமைப்புகள் உதவி செய்தாலும் முழுமையாக உதவி செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.


தமிழகத்தில் அண்ணா பிறந்தநாள், காந்திஜெயந்தி ஆகிய நாட்களில் நன்னடத் தை காரணங்களுக்காக கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர். குவைத் நாட்டில் பிப்.25,26 தேதிகளில் சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது.


அதையொட்டி பல ஆண்டுகள் சிறையில் வாடும் தமிழர்களை விடுவிக்க மத்திய அரசு மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கல்வியின்மையால் பலர் போலி விசாக்களை ஏஜன்ட்கள் கொடுப்பதை அறியாமல் இங்கு வந்து அல்லல்படுகின்றனர்.


எனவே விசாவை பரிசோதனை செய்ய தனி அலுவலகத்தை தமிழகத் தின் முக்கிய நகரங்களில் அமைக்க வேண்டும். வெளிநாட்டில் வேலை செய்யும் தமிழர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தீர்ப்பதற்கு தனி அமைச்சகம் அமைத்த அரசு அதனை முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


வெளிநாட்டில் வேலை செய்து விட்டு தள்ளாத வயதில் தாயகம் திரும்பும் தமிழர்களுக்கு கேரளாவில் இருப்பது போன்று தனிநல வாரியம் அமைக்க வேண்டும்.


தஞ்சை, காரைக்கால், புதுச்சேரி, விழுப்புரம், திருச்சி, திருவாரூர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழர்கள் தான் அதிகமானோர் குவைத், துபாய் சிறைகளில் வருடக் கணக்கில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமுமுக வின் குவைத் மண்டல நிர்வாகி பீர்மரைக்காயர் மற்றும் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.